வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய் மிகவும் விசுவாசமான விலங்கு. நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான நட்பு எப்போதும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான நட்பை மையமாக வைத்து பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. நாய்களின் பாசம் மற்றும் விசுவாசத்தைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 


சமூக ஊடகங்களில் நாம் காணும் நாய்களின் பல அழகான வீடியோக்கள் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்க தவறுவதில்லை. சமீபத்திலும் ஒரு கியூட் நாயின் மிக வித்தியாசமான வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து சிலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | திருமணத்தில் மணப்பெண்ணின் செயலால் ஷாக்கான உறவினர்கள்: வீடியோ வைரல்


வீடியோவில் நாய் ஒன்று தனக்குத் தெரிந்தவர்களை ஆசிர்வதிப்பது போன்ற காட்சியை காண முடிகின்றது. இது பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது. நாய் தனது பாதத்தை அவர்களது தலையில் வைத்து ஆசிர்வதிப்பதைக் காண்கிறோம். இந்தக் காட்சியை முழுவதுமாகப் பார்க்க மிக நன்றாக உள்ளது. இந்த வீடியோவில் வரும் அனைவரும் மிக பாசமாக நாயின் அருகில் வருவதும், நாயும் மிகுந்த சிரத்தையுடன் ஒரு சாமியாரை போல அனைவரையும் ஆசீர்வதிப்பதையும் பார்க்க மிக ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. நாய் மக்களை ஆசிர்வதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அருள் புரியும் நாயின் வீடியோவை இங்கே காணலாம்:


 



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் thekattappa என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 2.72 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | Viral Video: வகுப்பறையில் ஆசிரியர் முன் காதல் ஜோடிகள்... ஷாக் தரும் வீடியோவை பாருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ