நாய் ஏறிய ஏணிப்படி.... பாடம் கற்ற நெட்டிசன்ஸ்: விடாமுயற்சிக்கு ஒரு வைரல் வீடியோ
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். விலங்குகளின் வீடியோக்கள் இணையவாசிகளிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குறிப்பாக பாம்புகள், குரங்கு, நாய், பூனை, சிங்கம், புலி போன்ற விலங்குகள் இணையத்தின் ஹீரோக்களாகவே பார்க்கப்படுகின்றன.
இந்த வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
ஒரு நாயின் விடாமுயற்சியின் வீடியோ தான் இது. நாய்கள் பொதுவாக நன்றியுள்ள விலங்குகளாக பார்க்கப்படுகின்றன. மனித சமூகத்துடன் மிக அருகில் இருக்கும் விலங்குகளில் நாய்களும் ஒன்று. இவை வீட்டில் வளர்க்கப்படுகின்றன, உற்ற நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. நாயின் விடாமுயற்சியை காட்டும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
வீடியோவில் ஒரு நாய் ஏணிப்படியில் ஏற முயல்வதை பார்க்க முடிகின்றது. ஏணிப்படிகளில் அது ஏறி விடுகிறது, ஆனால், மீண்டும் மீண்டும் அது வழுக்கி கீழே விழுந்து விடுகின்றது. ஏறியவுடன் சமநிலை தவறி இரு படிகளுக்கு மேல் அதனால் ஏற முடியாமல் போகிறது.
அங்கு அருகில் இருக்கும் பலர் இதை பார்த்து சிரிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. கீழே விழுந்த நாய் ஏணியை பார்த்து சற்று யோசிக்கிறது. அதன் பிறகு அது முயற்சிக்கும் பொழுது ஒரே தாவலில் தனது சமநிலையை அடைந்து விடுகிறது. குதித்து குதித்து ஏறினால் மேலே ஏற முடியாது என்பதையும் ஒவ்வொரு காலாக ஏணியின் மீது வைத்து ஏறினால்தான் தன் இலக்கை அடைய முடியும் என்பதையும் நாய் புரிந்து கொள்கிறது. அதேபோல் மெதுவாக செய்து ஏணியின் மீது ஏறி நாய் வெற்றிகரமாக மேல் தளத்தை அடைகிறது.
இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. மீண்டும் மீண்டும் தனது முயற்சியில் தோல்வியடைந்தாலும், பலர் தன்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாலும் நாய் விடாமல் முயற்சி செய்து தனது இலக்கை அடைந்து விடுகிறது. சிறு தோல்வியாலும் துவண்டு போகும் மனிதர்களுக்கு நாயின் இந்த செயல் பெரிய உத்வேகத்தையும் உறுதியும் அளிக்கின்றது.
மேலும் படிக்க | தாயை பிரிந்த குட்டி யானை! பேருந்தை வழிமறித்து உதவி கேட்கும் வீடியோ..
நாயின் விடாமுயற்சியை காட்டும் வீடியோவை இங்கே காணலாம்: