குழந்தையாக இருந்தாலும் சரி வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி வலி என்றால் எல்லோருக்கும் ஒன்று தான், ஊசி போடும்போது எல்லாருக்கும் வலிக்கத்தான் செய்யும்.  குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் கத்தி விடுவார்கள், பெரியவர்கள் வலியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனக்குளேயே வைத்துக்கொள்வார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.  தனக்கு எவ்வளவு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மருத்துவமனைக்கு சென்றால் ஊசி போடுவார்கள் என பயந்துகொண்டு மருத்துவமனைக்கு செல்லாமல் மாத்திரைகளை மட்டும் வாங்கி சாப்பிடும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.  மருத்துவமனைகளில் பலரும் ஊசியை பார்த்தவுடனேயே பயப்பட தொடங்கிவிடுவார்கள், அந்த ஊசியை அவர்களுக்கு போட்டு முடிப்பதற்குள் ஒரு போராட்டமே நடந்து முடிந்தது போல ஆகிவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சீண்டிய நபரின் கைகளை பதம் பார்த்த பாம்பு: பதற வைக்கும் வைரல் வீடியோ 


ஊசிக்கு பயந்து மனிதர்கள் இவ்வளவு செய்வதை பார்த்திருக்கும் நமக்கு விலங்குகளும் ஊசிக்கு பயப்படுவதை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது, தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோ ரசிக்கக்கூடிய வகையிலும் நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.  சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் மருத்துவமனையில் ஒரு அறையிலுள்ள படுக்கையில் நாய் ஒன்று இருப்பதையும் அதனருகில் ஒரு மருத்துவமனை ஊழியர் இருப்பதையும் பார்க்கமுடிகிறது.  அந்த ஊழியர் நாய்க்கு ஊசிபோடுவதற்காக ஊசியை எடுக்கிறார், ஊசியை பார்த்ததும் பயந்துபோன அந்த நாய் சிறுபிள்ளை போன்று அந்த ஊழியரை ஊசிபோட விடாமல் அவரின் கையை இறுக்கமாக பிடித்துக்கொள்கிறது.