தோழியுடன் விளையாடும் நாய்: கண்டிப்பா மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க, செம கியூட் வைரல் வீடியோ
Dog Viral Video: பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் மிக கியூட்டான ஒரு விஷயத்தை காண முடிகின்றது.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
நாய்கள் பேசுவது உண்டு, ஆனால் அதை மிகச்சிலரால்தான் புரிந்துகொள்ள முடியும் என பலர் கூறி நாம் கேட்டுள்ளோம். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் அருமையான ஒரு இணைப்பு இருப்பதையும் நாம் பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களிலும் இதை விளக்கும் பல வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. தற்போது இதை எடுத்துக்காட்டும் மிக அழகான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது பெட் நாயுடன் கண்ணாமூச்சி விளையாடுவதை பார்க்க முடிகின்றது. முதலில் அந்த சிறுமி நாயிடம் நாம் இப்போது கண்ணாமூச்சி விளையாடப்போகிறோம் என கூறுகிறார். பின்னர் அந்த விளையாட்டுக்கான விதிகளை அதற்கு விளக்குகிறார்.
வீடியோவின் துவக்கத்தில், சிறுமி நாயிடம் விளையாட்டு பற்றி விளக்குவதை காண முடிகின்றது. அந்த செல்ல நாயின் பெயர் மங்கி என்பது அந்த சிறுமி அதை அழப்பதன் மூலம் புரிகிறது. "நீ முதலில் கண்ணை மூடு, நான் ஒளிந்துகொள்கிறேன்.. நீ என்னை கண்டுபிடி’ என அந்த பெண் நாயிடம் கூறுகிறார்.
ஒரு குட்டி குழந்தையை போல் நடந்துகொள்ளும் அந்த நாய், சிறுமி கூறுவதை அப்படியே கேட்டு நடக்கிறது. சுவரில் தன் முகத்தை வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு தன் தோழி ஒளிந்துகொள்ள காத்திருக்கிறது. பின்னர் சற்று நேரம் கழித்து அது திரும்பிப் பார்க்கவே, ‘ஏய்... ஏமாற்றாதே’ என சிறுமி எச்சரிக்கிறார். பின், மீண்டும் முகத்தை திருப்பிக்கொள்கிறது. ‘நான் ஒளிந்துகொண்டு விட்டேன்.. கண்டுபிடி’ என சிறுமி குரல் கொடுத்தவுடன் அவரை கண்டுபிடிக்கச் செல்கிறது.
சோ ச்வீட் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
Playing hide and seek.. pic.twitter.com/iNN6fX2bIE
இதுவரை, இந்த கியூட்டான வீடியோவுக்கு 1.1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 53.2K லைக்குகளும் கிடைத்துள்ளன. இந்த வீடியோவை 5,000க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.
"வீடியோ மிக கியூட்டாக உள்ளது. ஆனால், அந்த நாய் சிறுமி எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடும். நாயின் மூக்கை யாராவது தோற்கடிக்க முடியுமா?’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், ‘எத்தனை அழகு..அந்த பெண் மிக நம்பகமான ஒரு நண்பருடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு எப்போதும் எந்த ஆபத்தும் வராது’ என கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் இன்னும் ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கினாலும் மயிர்கூச்செரிய வைக்கும் எஸ்கேப் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ