சாலை விபத்தில் சிக்கினாலும் மயிர்கூச்செரிய வைக்கும் எஸ்கேப் வீடியோ வைரல்

Accident Video Viral: விபத்தில் சிக்கியவர்களை பார்த்தால் கவலை ஏற்படும்... ஆனால் இந்த விபத்து ஓரிரு நொடிகளில் ஆசுவாசம் தருகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 25, 2022, 09:29 PM IST
  • விபத்தில சிக்கினாலும் அதிர்ஷ்டம் வேணும்!
  • வைரலாகும் விபத்து வீடியோ
  • சாலை விபத்தில் சிக்கினாலும் எஸ்கேப்
சாலை விபத்தில் சிக்கினாலும் மயிர்கூச்செரிய வைக்கும் எஸ்கேப் வீடியோ வைரல் title=

Accident Video Viral: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

அதிலும் விபத்து வீடியோக்கள் கலக்கத்தை ஏற்படுத்தும். ஆனால்,  இந்த விபத்து ஓரிரு நொடிகளில் ஆசுவாசம் தருகிறது. சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது, இரு கனரக வாகனங்களுக்கு இடையில் சிக்கினால் என்னவாகும்?

இந்த வீடியோவை பார்த்தால் திகைத்துப் போகாமல் இருக்க முடியாது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

மேலும் படிக்க | இழக்கும் மாண்பை மீட்க ராகுலுடன் கைகோர்ப்போம் - கமல் ஹாசன் அழைப்பு

ஏராளமான வாகனங்கள் செல்லும்போது, திடீரென விபத்து ஏற்படுவது சகஜம் தான். அதிலும் மிகப் பெரிய வாகனங்கள் செல்லும்போது, சிறிய வாகனங்கள் கொஞ்சம் இடம் விட்டு செல்வது நல்லது. ஆனால் பாதுகாப்பாக வண்டி ஓட்டினாலும், விபத்து என்பது எதிர்பாராமல் நிகழ்வது தானே?

இந்த வீடியோவைப் பார்க்கும் போது முதலில் அச்சம் ஏற்படுகிறது. சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையில் மாட்டிய கார், சட்னியாகி இருக்கும் என்று பயம் எழுகிறது.

இந்த விபத்தை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து உடனே வந்து சிக்கிய வாகனத்தை மீட்கும் மீட்புபணியில் விரைந்து ஈடுபட நினைத்தனர். ஆனால், காரில் இருந்தவர் அப்படியே அலுங்காமல் குலுங்காமல் இறங்குவதைப் பார்த்தால் ஆச்சரியம் ஏற்படுகிறது

மேலும் படிக்க | தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் - கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

மேலும் படிக்க | குசும்பு பிடித்த குரங்கின் குறும்பு, அடி வாங்கிய அப்பாவி முதியவர்: செம வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News