வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள இணைப்பு மிக அரிது. இதை விளக்கும் பல வீடியோக்களை நாம் சமூக வலைத்தளங்களில் தினமும் காண்கிறோம். அப்படி ஒரு வீடியோ மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது காண்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது.


இந்த வீடியோவில், நாய் ஒன்று குழந்தைக்கு தரையில் தவழக் கற்றுக்கொடுப்பதை காண முடிகின்றது. ஒரு குழந்தை தரையில் படுத்துக்கொண்டுள்ளது. அருகில் அந்த வீட்டின் வளர்ப்பு நாயும் உள்ளது. வீடியோவில் காணப்படும் நபர், அந்த நாயிடமும் குழந்தையிடமும் ஏதோ சொல்ல, அந்த நாய் குழந்தைக்கு தவழ்வது எப்படி என செய்து காட்டுகிறது.


மேலும் படிக்க |‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன் 


நாய் செய்வதை குழந்தையும் மிக கவனமாக பார்க்கிறது. குழந்தை தவழ முயற்சிக்கும் நிலையில், அதை நாய் செய்து காட்டுவது மிகவும் அழகான ஒரு காட்சியாக உள்ளது. இது காண்பதற்கு, வீட்டில் ஒரே தாய் தந்தைக்கு பிறந்த குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் போல் இருக்கிறது. நாய்கள் வீட்டின் உறுப்பினர்களாகவே மாறி விடுகின்றன என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாக உள்ளது. 


நாய் மற்றும் குழந்தையின் கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:  



பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் இந்த வீடியோ, ட்விட்டரில் Yog என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  ஒன்பது வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை ஏற்கனவே 50.7 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | Viral Video : சிக்கலில் முடிந்த சாகசம்... தாடியில் தீ பிடித்து விபரீதம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ