கார் மெக்கானிக்காக மாறிய பூனை! வைரலாகும் வீடியோ!

பூனை ஒன்று காருக்கடியில் படுத்துக்கொண்டு கார் மெக்கானிக் பழுது பார்ப்பது போன்று செய்யும் செயல் இணையத்தில் பரவி கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 30, 2022, 09:19 AM IST
  • கார் மெக்கானிக்காக மாறிய பூனை.
  • மெக்கானிக்கை போல் போஸ் குடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கார் மெக்கானிக்காக மாறிய பூனை! வைரலாகும் வீடியோ! title=

பலரது வாழ்க்கையே இப்போது கையடக்க ஸ்மார்ட்போனுக்குள் முடங்கிவிட்டது, இதில் நல்லவிதமான பல விஷயங்களும் நிரம்பி கிடக்கிறது, அதேசமயம் ஆபத்தான பல விஷயங்களும் நிரம்பி கிடக்கிறது.  அதில் நாம் நல்லதை எடுத்துக்கொள்கிறோமா கேட்டதை எடுத்து கொள்கிறோமா என்பது தான் முக்கியம்.  மேலும் இணையத்தில் நம்முடைய கவலைகள் மற்றும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை தரும்படியான பல அற்புதமான நிகழ்வுகள் நிரம்பி கிடக்கின்றது.  அந்த வகையில் நம்மை பெரிதும் மகிழ்விக்கும் காட்சி என்றால் அது விலங்குகளின் குறும்புத்தனமான செயல்கள் தான், விலங்குகளின் குறும்புகளை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.  நாம் பார்த்து பயப்படும் விலங்குகளுக்குள்ளும் கூட ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருப்பதை இதுபோன்ற இணையதளங்களின் மூலம் தான் பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை! 

இப்போதும் இங்கும் நாம் ஒரு விலங்கின் வீடியோவை தான் பார்க்க போகிறோம், நமது வீடுகளில் வளர்க்கக்கூடிய பூனை தான் பெரும்பாலும் பல குறும்பு செயல்களை செய்து பலரது நெஞ்சங்களிலும் நீங்காத இடத்தை பிடித்துவிடுகிறது.  ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் அந்த வைரல் வீடியோவில் ஒரு கார் நின்றுகொண்டு இருப்பதையும், அந்த காருக்கு அடியில் ஒரு பூனை படுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.  அப்படி அந்த பூனை காருக்கு அடியில் என்னதான் செய்கிறது என்று பார்த்தால் அந்த பூனை மெக்கானிக் பழுது பார்ப்பது போன்று எதையோ செய்துகொண்டு இருக்கிறது, இதனை பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது.

 

இந்த வீடியோவுடன், பூனை எதையோ திருட முயல்கிறது என்று நகைச்சுவையான கேப்ஷனும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவானது பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் மற்றும் கமெண்டுகளை வாரி குவித்துள்ளது.

மேலும் படிக்க | முதலை வடிவில் ராட்சத உடும்பு, அலறியடித்து ஓடிய மான்: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News