Viral Video : சிக்கலில் முடிந்த சாகசம்... தாடியில் தீ பிடித்து விபரீதம்!

நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2022, 01:29 PM IST
  • பெட்ரோல் - நெருப்பை வைத்து சாகசம்.
  • வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Viral Video : சிக்கலில் முடிந்த சாகசம்... தாடியில் தீ பிடித்து விபரீதம்! title=

நெருப்பில் சாகசம் செய்வது எப்போதும் ஆபத்தை விளைவிக்க கூடியதுதான். தொழில்முறையாக சாகசம் செய்பவர்களும் நெருப்பில் மிகவும் கவனமாகதான் இருப்பார்கள். 

அந்த வகையில், நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரவி பட்டீதர் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 

அந்த வீடியோவில், ஒரு நபர் பெட்ரோல் மற்றும் தீ பந்தத்தை கையில் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் சாகசம் செய்து வந்தார்.  பார்வையாளர்களுக்கு மத்தியில் டேபிள் மீது நின்று கொண்டு, வாயில் பெட்ரோலை ஊற்றிய அந்த நபர், நெருப்பை வைத்து சாகசம் காட்டினார். 

மேலும் படிக்க | போன ஜென்மத்துல செல்லம் 'எலக்ட்ரீஷனா' இருந்திருக்குமோ? மின்வேலி தாண்டும் யானை வீடியோ

அப்போது, பெட்ரோல் துப்பியபோது, நெருப்பு அவரின் தாடியில் பற்றிக்கொண்டது. தொர்ந்து, நெருப்பு அவரின் முகம் முழுவதும் பரவ, அவர் அலறித் துடித்தார். உடனடியாக இரண்டு பேர் சேர்ந்து அவர் முகத்தில் இருந்த நெருப்பை அணைத்து, அவரை மீட்டனர். 

இந்த வீடியோ எப்போது, யாரால், எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற ஆபத்தான சாகசங்களை யாரும் முயற்சிக்க கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | எவன்டா அவன் காதை கடிக்கிறது.. வைரலாகும் பூனையின் ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News