இந்த வீடியோவைப் பார்த்தால், ’நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்’  என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. சிங்க உடையில் நாய் பீடு நடை போடும் வீடியோ இணையத்தை கலக்குகிறது. இண்டர்நெட் உலகம் நமக்கு பலவிதமான அனுபவங்களை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சி, திகைப்பு, ஆச்சரியம், ஆதங்கம் என பலப்பல உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோக்கள் இணையத்தை கலக்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், சிங்கம் ஒன்று பொது இடத்தில் கம்பீரமாக நடந்துவருகிறது. அந்த சிங்க நடையை வீடியோவில் பார்த்தால் ரசிக்கலாம். ஆனால், நேரில் இருந்தவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? 
உண்மையில் அது சீறும் சிங்கமல்ல, தனது எஜமானருக்கு நன்றியுடன் வாலாட்டும் செல்ல நாய் என்பது தெரிந்தால் ஆச்சரியம் ஏற்படுகிறது.



எந்த வேடம் போட்டாலும் பொருந்தும் தசாவதார நாயகனைப் பற்றி, இந்த செல்லப்பிராணியின் எஜமானருக்குத் தெரியுமோ என்று நினைக்கும் அளவுக்கு அட்டகாசமான மேக்கப்! நாயும் சும்மா சொல்லக்கூடாது, சூப்பராக சிங்க நடை போட்டுவருகிறது.
நாய்க்கு சிங்க வேடம் இவ்வளவு பொருத்தமாக இருக்குமா? சான்ஸே இல்லை என்று சொல்லி பலரும் இந்த 12-வினாடி கிளிப்பை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்களாம்! பீடுநடை போட்டு நடந்துவரும் சிங்க நாய், தனது எஜமானரிடம் சென்றதும், அவர் அதன் தலையை தடவிக் கொடுக்கிறார்.
 
இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் தங்களது கருத்துக்களை ரசனையுடன் பகிர்ந்துள்ளனர். ஒருவர் 'நாய்' மற்றும் 'சிங்கம்' ஆகிய பெயர்களை இணைத்து அதை 'டாக்லி' (Dogli) என்று புதிய பெயர் சூட்டியுள்ளார். மற்றொருவர் இந்த சிங்க வடிவ நாயை, "குறைந்த பட்ஜெட் சிங்கம்" என்று கலாய்க்கிறார். 


"இது iOS ரிங்டோன் கொண்ட ஆண்ட்ராய்டு போன் போல் தெரிகிறது" என்று மற்றும் ஒருவர் கலக்கினால், இன்னும் ஒருவரோ, "இது நிறைய பேரை பயமுறுத்தும் ஒல்லியான சிங்கம்" என்கிறார்.இப்படி பல சுவராசியமான கருத்துக்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் லைக்குகள் மற்றும் பதிலூட்டங்களைப் பெற்றுள்ளது. 


Also Read | 'அடிப்படையில் நிர்வாணமாக' இருந்த பெண் அணிந்திருந்த உடை இது! வைரலாகும் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR