இறந்த நண்பனை சோகமாக வழியனுப்பும் நாய்களின் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்
இறந்த நண்பனுக்காக ஒன்று கூடிய நாய்க்கூட்டிகள் கண்ணீர் மல்க தனது நண்பனுக்கு பிரியா விடை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நாய் நன்றியுள்ள விலங்காக சொல்லப்பட்டாலும், தோழமையின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டு என்பதற்கும் சான்றாக கூறலாம். ஏனென்றால், இறந்த நண்பனை முறையாக வழியனுப்ப வேண்டும் என்பதற்காக சக தோழமை நாய்களுடன் சேர்ந்த இறந்த நாய்க்கு இறுதிச் சடங்கு செய்யும் நாய்களின் நெகிழ வைக்கும் வீடியோ காண்போரின் கண்களை குளமாக்குகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைராலாகியுள்ளது. அன்பு தான் இந்த உலகமே என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. வாழும்போது என்ன செய்தாலும், இறந்த பிறகு நாலு பேர் நமக்காக வந்து நின்றால் தான் இவ்வளவு நாள் இந்த பூமியில் நாம் வாழ்ந்ததற்கு அர்த்தம் என்று சொல்வதை கேட்டிருப்போம்.
மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்
அது மனிதர்களுக்கும் மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதை வீடியோ விளக்குகிறது. எல்ல விலங்குகளுக்கும் இம்மாதிரியான இறுதி மரியாதை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த நாய்க்கு இப்படியான அதிர்ஷ்ட மரியாதை கிடைத்திருக்கிறது. வளர்த்தவர்கள் அல்லது நாய் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் செய்ய வேண்டியதை சக நாய்களே இறுதிச் சடங்கு செய்வது தான் வியப்பு. அவற்றுக்கு பிறப்பு இறப்பு தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் மனிதர்கள் மத்தியில் எழும்.
அதற்கு பதில், நிச்சயம் தெரியும் என்று கூறலாம். நாய் குட்டிகளை ஈன்ற பிறகு தன் குட்டிகளை வளர்ப்பதற்காக அவை காட்டும் அன்பும் பரிவும் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனுடைய பதட்டமும் பாசமும். அப்படி தான், பிரியம் வைத்தவர்கள் யாராக இருந்தாலும் நாய்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்கும். இதனை இந்த வைரல் வீடியோவிலும் நேரடியாக காண முடியும். @AwanishSharan என்பவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் தெரு நாய்கள் எல்லாம் ஒன்று கூட இறந்த நாய்க்கு குழி பறித்து அந்த நாயை அந்த குழியில்போட்டு மண் தள்ளி இறுதிச் சடங்கு செய்கின்றன.
மேலும் படிக்க | விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ