பொதுமக்களிடையே நம்பகத்தன்மை உறுவாக்க போலி twitter கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் twitter நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து பிரபலங்கள் பலரது ட்விட்டர் கணக்கினை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் குறைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கணக்கினை பின்தொடர்வோர்களில் 300000 குறைந்துள்ளது. இதனால் தற்போது ட்ரம்பின் ட்விட்டர் கணக்கினை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது 53.1 மில்லியனாக குறைந்துள்ளது.


அமெரிக்க ஊடக பிரபலங்களான எலன் டி ஜேனர்ஸ், ஓப்ரா வின்ஃபிரி, கிம் கார்டிசன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களை இழந்துள்ளனர்.


இதேப்போல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும், முன்னால் அதிபர் பராக் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கிலும் சுமார் 1.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் குறைந்துள்ளனர்.


தற்போது சமூக வலைத் தளங்களில் வதந்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வன்முறை சம்பவங்களூம் அதிகரித்து வருகின்றன. இதனால் ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் தங்கள் வலைதளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


அந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் தனது கணக்குகளில் உள்ள போலி பயன்பாட்டாளர்களை கண்டறிந்து நீக்கி வருகிறது. அதன்படி கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 70 மில்லியன் போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன.