கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முஜுக்குன்னு பகுதியை சேர்ந்த ஜித்து என்ற இளைஞர் இம்மாதம் ஒன்றாம் தேதி அந்த பகுதியில் இருந்து மலைப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். மது போதையில் இருந்த இவர் அந்த பாம்பை தனது இருசக்கர வாகனத்தில் அடைத்து வைத்து பாம்புடன் வலம் வந்ததோடு இரவு நேரம் அங்காங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தில் அடைத்து வைத்திருந்த பாம்பை எடுத்து தனது கழுத்தில் போட்டும், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் சுற்றி வைத்தும் இவர் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் காட்சிப்படுத்தி வலம் வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தோளில் பாம்பு, உதட்டில் சிரிப்பு: பாம்புடன் படு கூலாக போஸ் கொடுத்த யஷிகா, வீடியோ வைரல்


இதனை தொடர்ந்து இந்த பாம்பை ஜித்து கொயிலாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த பாம்பை பெருவண்ணாமூழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஜித்து பாம்பை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வரும் முன் மது போதையில் அந்த பாம்பை வழி நெடுவே துன்புறுத்தி காட்சிப்படுத்தி வந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாம்பை துன்புறுத்திய ஜித்துவை தேடி வருகின்றனர்.


 



சமீபத்தில் கேரளாவில் பிரபல பாம்புபுடி வீரரான  வாவா சுரேஷை நாகப்பாம்பு கடிதத்தில் அவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சிறிது தினங்களுக்கு முன்பு குணமாகி சுரேஷ் வீடு திரும்பிய நிலையில் மலைப்பாம்பை ஜித்து துன்புறுத்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.


மேலும் படிக்க | 'நீ பாம்பா இருக்கலாம்..ஆனா நான் பொண்ணு, நீ அடங்கிதான் ஆகணும்': மாஸ் பெண்ணின் வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR