குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் குடிமகனின் வீடியோ வைரல்
குடிமகன் ஒருவர் குடிபோதையில் வீதியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குடிமகன் இருந்தாலே கலாட்டா இருக்காத இடமிருக்காது. வன்முறை ஒருபுறமிருக்க, ஜாலியான பக்கமும் குடிமகன்களிடம் இருக்கும். சில இடங்களில் குடிமகன்கள் செய்யும் சேட்டை வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடும். பிறருக்கு தொந்தரவு செய்யாத காமெடிகளை ரசிப்பதிலும் தவறில்லை என்ற அம்சத்தில் இதனையெல்லாம் அணுகலாம். அப்படி, குடித்துவிட்டு குடிமகன் புதுமையான ஸ்டெப் ஒன்று போடும் வீடியோ தான் இப்போது இணையத்தை கலக்கும் சென்சேஷனான வீடியோவாக உள்ளது.
ஏபி என்ற ஐடியில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், ஒரு நிகழ்ச்சிகாக்க மேளங்கள் தடபுடலாக இசைக்கப்படுகிறது. மேள தாளங்கள் ஒலித்தால் சொல்லவா வேண்டும், அந்த இடமே கூட்டம் கூடியிருக்கிறது. மேள இசைப்பாளர்கள் ஜோராக மேளம் அடிப்பதால், மக்களும் ஜோராக அந்த இடத்தில் ரசித்தவாறு இருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த குடிமகனால், தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. குத்தாட்டம் போடுவதற்கு ஏற்ப டிரம்ஸ் இசைக்கப்படுவதால், களத்தில் குதித்துவிட்டார் குடிமகன். ஆனால், அவர் வேற லெவலில் என ஆடுவார் என எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு அவர் டிவிஸ்ட் ஒன்றை வைத்தார்.
மேலும் படிக்க | Viral video: நாகப்பாம்பை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி
ராணுவத்தில் டிரில் பிராக்டிஸ் செய்யும் ஸ்டெப்புகளை டிரம்ஸ் அடிக்கும்போது ஆடினார். அதுவும் பார்ப்பதற்கு நன்றாக தான் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் என்சிசி டிரில்களை பார்த்தவர்களுக்கு, அவரின் ஸ்டெப்புகள் என்னவென்று புரியும். சாதாரண வேடிக்கை பார்க்கும் மக்கள், இது என்னய்யா ஸ்டெப்? என்ற ரீதியில் தான் பார்த்திருப்பார்கள். இருந்தாலும், அவரின் ஆட்டத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ 25 ஆயிரம் பார்வகளைக் கடந்துள்ளது.
மேலும் படிக்க | Viral Video : நம்மாலயே முடியாது., யானை பண்ணுது : அசர வைக்கும் விடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR