தாயுமானவராய் மாறிய ரிக்ஷா ஓட்டுநர்! இதோ ஒரு ஆண் தேவதை என பாராட்டும் நெட்டிசன்கள்
ஒரு கையில் குழந்தையை ஏந்தியும், மற்றொரு கையில் சைக்கிள் ரிக்சா போலன்ஸ் செய்து பீகார் இளைஞர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது
இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் வித்தியாசமானவை வைரலாகின்றன. பாம்பு, பல்லி, விலங்கு என ஊர்வன பறப்பனவற்றில் வீடியோக்கள் மட்டுமா வைரலாகிறது? கொடூரம், அன்பு, அரவணைப்பு, ஆத்திரம் ஆக்ரோஷம் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் சக்கைப்போடு போடுகின்றன. அதேபோல ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோ கல் நெஞ்சையும் கனிய வைக்கும் வீடியோவாக இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் எடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இருக்கும் ரிக்ஷா ஓட்டுநரை அனைவரும் ஆண் தேவதை என்று பாராட்டுகின்றனர்.
காதல் மனைவி கைவிட்டு காதலனனுடன் ஓடிப்போனதால் மனமுடைந்தாலும், கைக்குழந்தைக்கு தாயாகவும் மாறி தாயுமானவன் என்று பெயர் வாங்கியுள்ளார் இந்த அப்பாவி அப்பா. சியோனி மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பீகாரைச் சேர்ந்த ராஜேஷ், தனது குடும்பத்தினருடன் நடைபாதையில் வசித்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்
மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதால் கைக்குழந்தையும் கணவரையும் விட்டு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. தாயில்லாத பிள்ளைக்கு தந்தையே தாயாகிவிட்டார்.
குழந்தைகளைப் பராமரிப்பதற்கு யாரும் இல்லாத அவல நிலையில், மத்திய பிரதேசத்திற்கு வந்த ராஜேஷ், தெரிந்த வேலைகளை செய்து வந்துள்ளார். பின்னர் சைக்கிள் ரிக்சா ஓட்டி குழந்தைகளின் பசியை போக்குகிறார். கைக்குழந்தையை தோளில் சுமந்துக் கொண்டே அவர் சைக்கிள் ரிக்சா ஓட்டுவது அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்கிறது.
ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் சைக்கிள் ரிக்சாவை ஓட்டுவது சர்க்கஸ் காட்சியைப் போல இருக்கிறது. இந்த காட்சியை வீடியோவாக எடுத்த ஒருவர் ,ட்விட்டரில் பதிவிட்டார். டிவிட்டரில் வைரலான வீடியோவை பலரும் பல்வேறு ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: கீரியிடம் சிக்கி சின்னாபின்னமான நாகப்பாம்பு!
இணைய உலகமே இந்த செயலை பார்த்து நெஞ்சம் நெகிழும்போது, இந்த விஷயம் அந்த நபருக்கு தெரியுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை. தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை என்ற வாதத்தை பொய்யாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே; தாலாட்டுப் பாடும் அன்னையின் அன்பும் தந்தையின் அன்பின் பின்னே.... என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
நெஞ்சை ரணமாக்கும் வீடியோ என்று சிலர் இந்த வீடியோவுக்குபதிவிட்டால், மற்றொருவர் இந்த தாயுமானவருக்கு நாம் இணையதளம் மூலம் நிதி திரட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நபரை கண்டுபிடித்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ