Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

1956ம் ஆண்டு வெளியான பிரிட்ஜின் பிளாக் அண்ட் வொயிட் விளம்பரம் மிகவும் வைரலாகி வருகிறது. பிரிட்ஜின் அம்சங்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2022, 06:32 PM IST
  • 66 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரிட்ஜ்.
  • வியப்பில் ஆழ்த்தும் விளம்பரம்.
  • 1956 ஆண்டின் வீடியோ வைரலானது.
Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம் title=

விஞ்ஞானம் முன்னேறி வருவதை அடுத்து, புதிய தொழில்நுட்பங்களும் மேம்பட்டு வருகின்றன. அன்றாடத் தேவைகளும் மேம்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள்கொண்டு வரப்படுகின்றன. தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக நாளுக்கு நாள் பொருட்கள் ஹைடெக் ஆகி வருகின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பிரிட்ஜ் என்னும் குளிர்சாதன பெட்டியை எடுத்துக் கொண்டால், அதில் பல்வேறு விதமான மாற்றங்களை காணலாம். 1956-ல் அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டியுடன் இப்போது  உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை ஒப்பிடும் போது ஆற்றல் சேமிப்பு அதாவது நான்கு ஸ்டார்கள் அல்லது ஐந்து ஸ்டார்கள் என சேமிக்கும் திறன் இருந்தாலும், 1950களில் வந்துள்ள பிரிட்ஜ் உங்களை மலைக்க வைக்கும். 

அந்த காலத்து பிரிட்ஜ்க்ளில் ஆற்றல் சேமிப்புக்கன அம்சங்கள் இல்லை என்றாலும், அவர் நீண்ட காலம் உழைக்கக்கூடியதாக இருந்தன என்பதை மறுக்க இயலாது. மேலும், தற்போது வைரலாகும், 1956ம் ஆண்டில் அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டிக்கான விளம்பரத்தை பார்த்தால், நீடித்து உழைப்பது மட்டுமல்ல, நம்மை மலைக்க வைக்கும் பல்வெறு அம்சங்களை கொண்டிருந்தது எனக் கூறலாம்

மேலும் படிக்க |  Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

இந்த நாட்களில் 66 வருட பழமையான குளிர்சாதனப்பெட்டியைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த குளிர்சாதன பெட்டியைப் பார்த்தால் நீங்கள் நவீன குளிர்சாதன பெட்டி ஒன்றுமே இல்லை என நினைக்கத் தோன்றும்.  @lostinhist0ry என்ற  ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் 66 ஆண்டுகளுக்கு முந்தைய குளிர்சாதனப் பெட்டியின் விளம்பரம் (66 வயது ஃப்ரிட்ஜ் விளம்பரம்) காட்டப்பட்டுள்ளது. இந்த 1 நிமிடம் 17 வினாடி வீடியோவில் இரண்டு விஷயங்கள் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.  அந்த காலகட்டத்தின் ஃப்ரிட்ஜின் சிஸ்டம் எப்படி வேலை செய்தது என நினைக்கும் போது ஆச்சர்யம் மேலிடும்.

வைரலாகும் விளம்பரத்தை கீழே காணலாம்:

 

 

வைரலாகும் அந்த விளம்பரத்தில் பார்ப்பது சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ்தான் என்றாலும் உள்ளே பலவகையான தேவைகளை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள  பொருட்களை வைப்பதற்கான இட வசதிகள்  ஆச்சர்யத்தில்,அழ்த்தும்.  லட்சக்கணக்கான பணம் செலவழித்து வாங்கும் டபுள் டோர் ஃப்ரிட்ஜில் கூட, இந்த குளிர் குளிர்சாதனப்பெட்டியில் இருப்பது அனேகமாக இருக்காது எனலாம்.

இன்று போல் கதவுகளில் சாமான்களை வைக்க இடம் உள்ளது. கதவில் சில ஷட்டர்கள் உள்ளன. அதில் உள்ள அனைத்து பொருட்களும் மூடப்பட்டிருக்கும். ஏறக்குறைய இன்றைய காய்கறிப் பெட்டியைப் போலவே உள்ளது என்றாலும் இவை மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அதில் காய்கறிகள் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ்களை அகற்றும் நுட்பமும் அற்புதம். அதன் ஐஸ் ட்ரேயை ஒரு இடத்தைல் வைத்து தலைகீழாக இழுத்தால், ஒரு பெட்டியில் ஐஸ் கட்டி விழுகிறது.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News