மின்வேலி தாண்டி திருடும் திருடர்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் யானை மின்வேலி தாண்டி பார்த்திருக்கிறீர்களா?. ஆம் யானை ஒன்று மின்வேலியை முன்னெச்சரிக்கையாக தாண்டும் அழகான வீடியோ காண்போரை ரசிக்க வைத்திருக்கிறது. வனபகுதிகளை ஒட்டியிருக்கும் விளைநிலங்களில் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக மின்வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பிட்ட அளவு மின்சாரம் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதுகூட விதி இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் அப்படி நடப்பதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓசூர் அருகே ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைக் கூட்டங்கள்: வீடியோ வைரல்


அதிகளவு மின்சாரம் பாய்ந்து யானை உள்ளிட்ட விலங்குகள் இறக்கும் நிகழ்வுகளை அன்றாட செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது நடக்கக்கூடாது என்பது அனைவரின் விருப்பமும்கூட. வைரலாகியிருக்கும் வீடியோவில் இருக்கும் யானை போல் இருந்தால், நிச்சயம் மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறக்காது. ஏனென்றால் அந்தளவுக்கு யானை புத்திசாலித்தனமாக செயல்படுகிறது. மின்சாரம் இருக்கிறதா? என காலால் தொட்டு பார்த்து உறுதி செய்து கொள்ளும் யானை, அதன்பிறகு அந்த மின்வேலி கம்பிகளை உடைத்து எறிந்துவிட்டு சாலையை கடக்கிறது.



யானை மின்வேலிகளை உடைக்க முயற்சி செய்கிறது என்பதை அறிந்து கொண்ட வாகன ஓட்டிகளும் சற்று தொலைவிலேயே காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சிறிது நேரத்தில் யானை மின்வேலிகளை உடைத்து கம்பீரமாக சாலையை கடந்து அந்தப்பக்கம் இருக்கும் வனபகுதிக்கு செல்கிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், போன ஜென்மத்துல செல்லம் 'எலக்ட்ரீஷனா' இருந்திருக்குமோ? என கிண்டலடித்துள்ளனர்.


மேலும் படிக்க | முழு மானை விழுங்கிய 10 அடி ராட்சத மலைப்பாம்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ