ஓசூர் அருகே ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைக் கூட்டங்கள்: வீடியோ வைரல்

ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் ஆனந்த நீராடின.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 30, 2022, 01:19 PM IST
  • யானைகள் குளிக்கும் வீடியோ.
  • வைரலாகும் வீடியோ.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
ஓசூர் அருகே ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைக் கூட்டங்கள்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியிலிருந்த வந்தயானைக் கூட்டங்கள் குட்டையில் ஆனந்த குளியல் போட்டது. இதனை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஓசூர் வனப்பகுதிக்கு யானை கூட்டங்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இடப் பயிற்சி நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பன்னார் கட்டா வனப்பகுதியிலிருந்த 70 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் ஜவளகிரி வனப்பதிக்கு வந்து சேர்ந்தது. இன்று காலை அந்த யானைக்கூட்டங்கள் தளி அருகே உள்ள சிக்க நாயக்கன் குட்டையில் ஆனந்த குளியல் போட்டுள்ளது இதனை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

தொடர்ந்து யானைக் கூட்டங்கள் ஜவளிகிரி வனப் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வன பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது எனவே அகலக்கோட்டை, பாலத் தொட்டனப் பள்ளி கிராம பொது மக்கள் பாதுகாப்பாகவும்  எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News