பாகனிடம் பாசமழை பொழியும் கியூட் யானை: வீடியோ வைரல்
யானைகளுக்கு தனது பாகன் மீது அதீத காதல். தங்கள் எஜமானரின் வார்த்தையைத் தவறாமல் பின்பற்றுகிறது அந்த யானை.
வைரல் வீடியொ: இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும். அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் எப்போதும் வைரலாகி வரும். சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்.
அதிலும் யானைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகிவிடும். அதற்கு காரணம், யானை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விலங்காகும். அந்த வீடியோ மேலும் கிளிக்கை தந்துவிடுவதுதான். இப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு வீடியோ இங்கு வெகுவாக வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த வீடியோ யானை மற்றும் யானை பாகன் தொடர்புடையது.
மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ!
அப்படிப்பட்ட அழகான வீடியோ ஒன்று தான் தற்போது வெளியாகியுள்ளது.
அப்படிப்பட்ட அழகான வீடியோ ஒன்று தான் தற்போது வெளியாகியுள்ளது. இதில், யானை மற்றும் பாகன் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது . இங்கு யானையுடன் பாகன் பேசுவதை நாம் காணலாம். ஆனால், யானையிடம் அவர் என்ன பேசுகிறார் என்பதை சரியாகக் கேட்க முடிய வில்லை. பின்னர் அந்த யானை உட்கார்ந்து பேசத் தொடங்கியது. இதற்காக, அது தனது முழு உடலையும் மண்டியிட்டு அருகே அமர்ந்து பேசிக்கொண்டது.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சில நேரங்களில் விலங்குகள் மனிதர்களை மிஞ்சும். இந்த யானையும் அப்படித்தான். அதன் எஜமானரின் உணர்வுகளுக்கு பதிலளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை இங்கே காண்க:
இந்த வீடியோ தற்போது soorya_puthran_karnnan என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் கோயிலின் வீடியோ இது. இந்த வீடியோ பல முறை லைக் செய்யப்பட்டு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ