கருப்புச்சட்டைக்காரனுக்கு கோயிலுக்குள்ள என்னடா வேலை? யானை செய்த சேட்டை!

யானை ஒன்று அதனை தாண்டி சென்ற நபரை தனது தும்பிக்கையால் ஒரேயடியாக தள்ளி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உருவ அளவில் பெரியதாக உள்ள யானையை பார்த்தால் பலருக்கும் ஒரு பயம் இருக்கும், சிலர் யானைக்கு ஆசைப்படுவார்கள் அதே சமயம் யானையின் அருகில் செல்ல பயப்படுவார்கள். விலங்கினங்கள் என்னதான் மனிதர்களுக்கு சில சமயங்களில் செல்லமாக இருந்தாலும், பார்க்க அழகாக இருந்தாலும் அவை எதிர்பாராத சில சமயங்களில் மனிதர்களுக்கு விபத்துக்களை ஏற்படுத்திவிடுகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது, அமைதியாக சென்றுகொண்டிருந்த நபரை யானை ஒன்று வேகமாக தள்ளிவிடும் காட்சி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | டெலிவரி பாயை வலை வீசி தேடும் ‘ஸ்விக்கி’ : தகவல் கொடுத்தால் ரூ. 5,000 பரிசு!
இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் இணையத்தில் பரவி விரைவில் கவன ஈர்ப்பை பெற்றுவிடும். அந்த வகையில் இப்போது இணையத்தில் பரவியுள்ள இந்த வீடியோவும் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெரிய யானை ஒன்று நெற்றியில் பெரிய பட்டையுடன் நின்றுகொண்டு இருக்கிறது, அதனருகில் கீழே பாகனும் அமர்ந்து இருக்கிறார். அப்போது அந்த வழியாக ஒரு நபர் நடந்து வருகிறார், அவர் அமைதியாக யானையை கடந்து முன்னே செல்கிறார், அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அந்த யானை உடனே தனது தும்பிக்கையால் அவரை ஒரே சுழட்டில் பின்பக்கமாக தூக்கி வீசுகிறது.