இணையத்தில் வைரலாகும் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டாவின் புதிய போஸ்டர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றார். மேலும், இயக்குனர் செந்தில் வீராசாமி முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார்.


‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 


தர்புகா சிவா இசையமைத்து வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா – ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர். முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பாரப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் துவங்கி விட்டதாகவும், கடந்த ஜூலை 20-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் லோகோ வெளியானது. 


இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இயக்குனர் சசிகுமார் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 


இதையடுத்து, தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.