தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி நடிகர் அஜித்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் அஜித் குமார் (Ajith Kumar) குறித்த செய்திகள் அவ்வப்போது பரவி வருகிறது. அதன்படி சமீப காலமாக நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சற்று முன் அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. 


ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன


இந்த வீடியோவில் தல அஜித் குறிபார்த்து துப்பாக்கி சுடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தல அஜீத் சமீபத்தில் தமிழக அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வாங்கி உள்ளார்.  இதனால் அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்பட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.


 



வலிமை அப்டேட்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.


சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  ஃபர்ஸ்ட் சிங்கள்ஸ் ஆகியவற்றை படக்குழு ரிலீஸ் செய்தது. தற்போது வலிமை படத்தின் டீஸரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளதாக கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அதாவது தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என தகவல்கள் பரவி வருகிறது.


ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR