உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான பெரியவர்களின் பார்வையின்மைக்கு முக்கிய காரணமான விழித்திரை நரம்பு சிக்கல் (retinal vein occlusion) பாதிப்பால் ஏற்படக்கூடிய பார்வை இழப்பைத் தடுக்கக்கூடிய கண் சொட்டு மருந்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரம்புச்சிதைவு மற்றும் வாஸ்குலர் கசிவுக்கான (neurodegeneration) பொதுவான காரணங்களை  தெரிந்துக் கொள்வதற்காக எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் (experimental therapy) அடிப்படையில் இந்த சொட்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தச் சோதனையின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கண் சொட்டு மருந்தானது, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மருந்துகளை விட சிறப்பாக சிகிச்சையளிக்கக்கூடும்.


Also Read | ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிப்பு


இந்த ஆய்வு அறிக்கையானது நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட்டுள்ளது.


விழித்திரையிலிருந்து ரத்தத்தை வெளியேற்றும் ஒரு பெரிய நரம்பு தடுக்கப்படும் போது, ரத்த உறைவு காரணமாக விழித்திரை நரம்பு அடைப்பு ஏற்படுகிறது.  இதன் விளைவாக, ரத்தமும் பிற திரவங்களும் விழித்திரையில் கசிந்து, ஒளி மின்னழுத்தங்கள் எனப்படும் சிறப்பு ஒளி உணர்திறன் நியூரான்களை (photoreceptors) சேதப்படுத்துகிறது.


தற்போது இந்த சிக்கலுக்கான மருந்தே இல்லை என்றே சொல்லலாம். ரத்த நாளங்கள் மற்றும் ரத்த குழாயில் ரத்தக் கசிவு ஏற்படுவதற்கு கொடுக்கப்படும் சிகிச்சைகான மருந்துகளே, பார்வையின்மைக்கு முக்கிய காரணமான விழித்திரை நரம்பு சிக்கல் (retinal vein occlusion) என்ற பிரச்சனைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. 


ஆனால் இதில் சில குறிப்பிடத்தக்க முக்கியமான குறைபாடுகளும் உள்ளன.


READ | கொரோனில் Covid-யை குணப்படுத்தும் என நாங்கள் சொல்லவில்லை: பதஞ்சலி CEO


இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் ஊசி போட வேண்டும், அதுமட்டுமல்ல, இந்த அச்சுறுத்தும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, சிகிச்சை பலனளிக்காமலும் போகலாம் என்பதும் மிகப் பெரிய பின்னடைவாக இருந்தது.


தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய கண் சொட்டு மருந்து சிகிச்சையானது காஸ்பேஸ் -9 (caspase-9 enzyme) எனப்படும் என்சைமில் தாக்கத்தை ஏற்படுத்துமென்று, இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்த டாக்டர் கரோல் எம். டிராய் (Carol M. Troy) கூறுகிறார். இவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வாகெலோஸ் கல்லூரியில், அல்சைமர் நோயியல் மற்றும் செல் உயிரியல் மற்றும் நரம்பியல் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் Taub ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் ஆவார்.  


சாதாரண நிலைமைகளில், காஸ்பேஸ்- 9 செல்களின் உயிரணு மரணத்திற்கு முதன்மைக் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது, இது இயற்கையாகவே சேதமடைந்த அல்லது அதிகப்படியான செல்களை அகற்றுவதற்கான இறுக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்ட பொறிமுறையாகும்.


ஆயினும், எலிகள் பற்றிய ஆய்வுகளில், டிராய் ஆய்வகம், விழித்திரை நரம்பு அடைப்பால் இரத்த நாளங்கள் காயமடையும் போது, ​​காஸ்பேஸ் -9 கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டு, விழித்திரையை சேதப்படுத்தும் செயல்முறைகளைத் தூண்டுவதாகக் கண்டறிந்துள்ளது. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட காஸ்பேஸ் -9 தடுப்பானைக் கண்டறிந்த பிறகு, அதை கண் சொட்டு மருந்து வடிவில் வழங்கமுடியும் என்பது நல்ல செய்தியாக இருக்கிறது.


மிக முக்கியமாக, இந்த சிகிச்சையானது விழித்திரையில் வீக்கம், அதிக ரத்த ஓட்டம் மற்றும் விழித்திரையில் நரம்பியல் சேதம் ஆகியவற்றைக் குறைக்கும். இந்த கண் சொட்டு மருந்துகள் ஏற்கனவே உள்ள சிகிச்சைகளிலும் ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.


Also Read | நோர்வே ஏர்: 97 போயிங் விமானங்களுக்கான ஆர்டர் ரத்து


இதனால், நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியும் என்பதோடு தொடர் சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியமும் இல்லை


விழித்திரை நரம்பு பிரச்சனை உள்ளவர்களிடம் இந்த கண் சொட்டுகளை சோதிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்த மருத்துவ சோதனைகள் மேலும் முன்னோக்கி நகரும்போது, பார்வையின்மைக்கு மற்றொரு பொதுவான காரணமான ​​ diabetic macular edema மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிற வாஸ்குலர் காயங்களுக்கும் சிகிச்சையளிக்க காஸ்பேஸ் -9 தடுப்பான்கள் பயன்படுத்தப்படுமா என்பதையும் டிராய் ஆய்வகம் ஆய்வு செய்யும்.


"வாஸ்குலர் செயலிழப்பு, நாள்பட்ட பல்வேறு நரம்பியல் மற்றும் விழித்திரை கோளாறுகளால் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர். ஏனெனில், காஸ்பேஸ்-9, மூளை மற்றும் கண்ணில் அதிக ஆற்றல் தேவைகளுக்கு காரணமாகிறது" என்று   கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வாகெலோஸ் கல்லூரியில், நோயியல் மற்றும் உயிரியல் பிரிவில் மேம்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி மரியா அவ்ருட்ஸ்கி தெரிவித்தார்.