மழை பெய்யும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கம்பங்களுக்கு அருகாமையில் செல்லும்போதும், சாலையில் செல்லும்போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆபத்தில் இருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது. எந்த நேரத்தில் எப்படியான ஆபத்து வரும் என்பதை மழைக்காலத்தில் மட்டும் சொல்ல முடியாது. மின் கம்பங்கள் இருந்தால் மின் கசிவு இருக்கும். சாலையில் நீர் செல்லும்போது அதற்குள் சென்றால் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவீர்கள். பார்ப்பதற்கு தண்ணீர் மெதுவாக சென்று கொண்டிருப்பது போல் தோன்றும். ஆனால் நிஜத்தில் அப்படியிருக்காது. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். கால் வைத்தாலோ... நடந்து சென்றாலோ தான் உங்களால் உணர முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்


இதற்காகவே எல்லா பக்கங்களிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதனை புரிந்து கொள்ளாமல் செல்லுபவர்கள் ஆபத்தில் சிக்கும்போது மீட்க முடியாத நிலைக்கு சென்றுவிடுவார்கள். அப்படி விழிப்புணர்வு இல்லாமல் தண்ணீரின் வேகத்தை குறைத்து மதிப்பிட்டு சென்றவர்கள் மொத்தமாக நீரில் மூழ்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நடந்து சென்றிருந்தால் கூட தப்பித்திருக்கலாம். அதில் ஏதாவது வாய்ப்பு இருந்திருக்கும். காரில் சென்றதால், யாராலும் தப்பிக்க முடியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் வெள்ள நீரில் குதிக்கிறார். அவரும் தப்பித்தாரா இல்லையா என்பது குறித்த தகவல் இல்லை. சாலையில் மற்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதுபோல், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநரும் நின்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். 



அவசரப்பட்டு சென்று வாழ்க்கையையே தொலைத்துவிட்டார். அவர் மட்டும் அல்லாமல் காரில் அவருடன் சென்றவர்களும் நீரில் மூழ்கிவிட்டனர் என்பது தான் வேதனையான விஷயம். @aadaavaan என்ற டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அந்தப் பகுதியில் நன்றாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலையின் குறுக்கே சென்ற நீரை பார்த்தவர்கள் காரை நிறுத்திவிட்டனர். ஆனால் பின்னால் சென்ற ஒரு கார், மழை நீரின் குறுக்கே சென்றுவிடலாம் என எண்ணி வேகமாக செல்கிறார். அப்போது நீரின் வேகத்தில் கார் செல்ல முடியாமல் அபாய வெள்ள நீரில் சிக்கி மூழ்கிவிடுகிறது. இந்த வீடியோ பார்க்கும்போது பதைபதைக்க வைக்கிறது. இனிமேல் சாலையில் செல்பவர்கள் இப்படியான விபத்தில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் விழிப்புணர்வு பெற வாய்ப்பு இருக்கிறது.    


மேலும் படிக்க | வகுப்பில் பெண்ணை ப்ரொபோஸ் செய்த குரங்கு: வெக்கம் வெக்கமா வரும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ