அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்

Snake Viral Video: வைரலான வீடியோவில், ஒரு பாம்பு பாலைவனத்தில் ஊர்ந்து செல்வதை நாம் காணலாம், அப்போதுதான் அதன் அருகே ஒருவர் வருவதை உணர்ந்து தான் இறந்தது போல் நாடகமாடுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 13, 2023, 02:47 PM IST
  • பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து செல்வதை காணலாம்.
  • அந்த நொடியே தான் இறந்தது போல் நடிக்கத் தொடங்குகிறது.
  • இன்றைய வைரல் வீடியோ.
அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல் title=

பாம்பு வைரல் வீடியோ: பூமியில் உள்ள உயிரினங்களில் பாம்புகள் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பாம்புகளின் பெயரைக் கேட்டாலே நமக்கு உடம்பெல்லாம் நடுங்க வைக்கும். ஒரு சிலரோ அதைப் பற்றி பேச கூட விரும்புவதில்லை. இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | சாரு யாரு தாராளப் பிரபு டோய்..! டெல்லியில் நடந்த விநோத சம்பவம்

இந்த நிலையில் இன்று நாம் காண உள்ள பாம்பின் வீடியோ சற்று வித்தியாசமானது என்றே கூறலாம். இதுபோன்ற ஒரு வீடியோவை நீங்கள் கட்டாயம் எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள், மனிதர்களின் நடிப்புத் திறனை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இன்று நாம் பாம்பின் நடிப்பை பார்த்த வியப்பில் உரையப் போகிறோம். பாம்பு கூட நாடகமாடும் என்று வெகு சிலரே அறிந்திருப்பார்கள். ஆம், மனிதர்கள் எப்படி நாடகம் செய்கிறாரோ, அதேபோல் பாம்புகளும் நாடகம் ஆடலாம். பொதுவாக சில பாம்புகள், தன்னைச் சுற்றி இருக்கும் சிறிய ஆபத்தை உணரும் போது, ​​இது போன்ற நாடகத்தை நடத்தும். அதாவது தனக்குள் உயிர் இல்லை என்பது போல் நடிக்கும்.

நாக்கு தள்ளி நாடகமாடும் பாம்பு
இணையத்தில் வைரலான காணொளியில் பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து செல்வதை காணலாம். அப்போது தான் அங்கு ஒரு நபர் வருவதை அந்தப் பாம்பு உணர்கிறது. உடனே ஆபத்தை உணர்ந்த அந்த பாம்பு அந்த நொடியே தான் இறந்தது போல் நடிக்கத் தொடங்குகிறது. வீடியோவை பார்க்கும் போது அசல் செத்த பாம்பு போல் இருக்கிறது. பாம்பின் அபார நடிப்பை இணையவாசிகள் பார்ட்டி வருகின்றனர்.

பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இணையதளத்தில் பகிரப்பட்ட வீடியோவில் இந்த பாம்பின் பெயர் Hognose Snake என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகை பாம்பு அதன் நடிப்பால் மிகவும் பிரபலமானது. இது ஒரு விஷப் பாம்பு என்றாலும், அதன் கடி மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இதயனிடையே இந்த வைரலான வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News