பாகிஸ்தான் என்றாலே ஒரு வெறுப்பு பார்வை பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், அங்கும் அழகிய சுற்றுலா தளங்கள் இருப்பதை மறந்துவிட்டனர். இந்தியாவின் இமயமலை அங்கும் இருக்கிறது. அழகிய பனிப்பிரதேசங்கள், நீரோடைகள், மலை முகடுகள் என சுற்றுலாவுக்கு உகந்த இடங்கள் ஏராளம். ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருப்பதுபோலவே பாகிஸ்தானுக்கு சொந்தமான காஷ்மீர் பிரதேசத்திலும் சூப்பரான சுற்றுலா நகரங்கள் இருக்கிறது. இவையெல்லாம் ஒருமுறை நீங்கள் வீடியோவில் பார்த்தால், அங்கு ஒருமுறை சென்று வர வேண்டும் என நிச்சயம் எண்ணுவீர்கள். அந்தளவுக்கு கண்களை குளிர வைக்கும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வயசானா என்ன? நான் உன்னை எப்போதும் காதலிக்கிறேன்! வைரலாகும் மூத்தக் காதல்


கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் சுற்றுலா துறை மீண்டும் புத்துணர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் சுற்றுலா களைகட்ட தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தான், சுவிட்சர்லாந்தில் இருக்கும் சாலையைப் போல், பசுமையை எதிரொலிக்கும் ஒரு சாலையின் வீடியோ வைரலாகியிருக்கிறது. காரில் பயணிக்கும் ஒருவர், மலைகளுக்கு நடுவே இருக்கும் நெடுஞ்சாலையில் செல்லும்போது இந்த வீடியோவை எடுத்திருக்கிறார். பசுமை போர்த்திய மலைகள், காண்போரின் கண்களை குளிர வைக்கின்றன. 



மலைகளுக்கு நடுவே பயணிக்கும்போது அந்த சாலையில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வைகயில் அந்த காட்சி இருக்கிறது. டிவிட்டரில் இந்த வீடியோ 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.சுற்றுலா செல்லும் விருப்பம் இருந்தால், உங்களின் பக்கெட் லிஸ்டில் பாகிஸ்தானின் பிரபலமான இடத்தையும், இந்த வீடியோவுக்குப் பிறகு சேர்த்துக் கொள்வீர்கள். 


மேலும் படிக்க | ஆத்தி! மலைப்பாம்போடு டிவி பார்க்கும் சிறுமி! திகில் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ