ஆத்தி! மலைப்பாம்போடு டிவி பார்க்கும் சிறுமி! திகில் வீடியோ!

சிறுமி ஒருவர் சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புடன் சோஃபாவில் அமர்ந்துகொண்டு மகிழ்ச்சியாக டிவி பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ அனைவரையும் திகிலடைய செய்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 27, 2022, 09:47 AM IST
  • மலைப்பாம்புடன் படுத்து இருக்கும் சிறுமி.
  • பயமில்லாமல் டிவி பார்க்கும் வீடியோ.
  • இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆத்தி! மலைப்பாம்போடு டிவி பார்க்கும் சிறுமி! திகில் வீடியோ! title=

'பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்பதை கேட்டிருப்போம், அது உண்மைதான் பாம்பை பார்த்தாலே நம் உடம்பெல்லாம் நடுங்கிவிடும்.  செத்துப்போன பாம்பை பார்த்தாலே பலருக்கு உடல் புல்லரிக்கும் அப்படி இருக்கையில் பாம்புடன் அதுவும் மலைப்பாம்புடன் விளையாடுவதெல்லாம் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.  ஆனால் இப்போதுள்ள சிறுவர்கள் எல்லாம் அசால்டாக மலைப்பாம்புடனேயே எவ்வித பயமுமின்றி நணபர்கள் போல பாசமாக இருக்க தொடங்கிவிட்டனர்.  'இளம்கன்று பயமறியாது' என்கிற பழமொழி உண்மை தான் போல என்பதை உணர்த்தும் விதமாக தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் ஒரு சிறுமி மலைப்பாம்புடன் டிவி பார்க்கும் காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க  | ‘ஏய்.. ஃபேர்வெல்லா இது?’ மாணவர்கள் கொடுத்த வினோதமான பிரியாவிடையின் வைரல் வீடியோ

இந்த திகிலான வீடியோவானது இன்ஸ்டாகிராமில் ladbible என்கிற கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு சிறுமி அமைதியாக சோஃபாவில் அமர்ந்துகொண்டு டிவியில் ஒளிபரப்பாகும் ஏதோவொரு நிகழ்ச்சியை மிக ஆர்வமாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்.  அந்த வீடியோவில் ஹைலைட் என்னவென்றால் அந்த குழந்தை தனக்கு கூட்டாளியாக 12 அடி மலைப்பாம்பை உடன் வைத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருக்கிறது.  மஞ்சள் நிறத்திலுள்ள அந்த மலைப்பாம்பின் மீது காலை போட்டுகொண்டு அந்த சிறுமி சாவகாசமாக அமர்ந்துகொண்டு எவ்வித பயமும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக டிவி பார்க்கிறார்.  அது பொம்மை பாம்பா அல்லது உண்மையான பாம்பா என்று சந்தேகித்தவர்களுக்கு வீடியோவின் இறுதியில் அந்த பாம்பு தனது வாயை திறந்து அனைவரையும் திகிலடைய செய்துவிடுகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 

இந்த காட்சியை பார்க்கும் நமக்கே இவ்வளவு பதட்டமாக இருக்கையில் அந்த குழந்தை எவ்வித சலனமுமின்றி மலைப்பாம்புடன் அமர்ந்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.  இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 5மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.  'நீங்கள் நம்பமாட்டீர்கள், ஆனால் இந்த சிறுமி பாதுகாப்பாக இருக்கிறாள்' என்று அந்த வீடியோவுடன் கேப்ஷன் சேர்க்க்கப்பட்டுள்ளது.  இணையவாசிகள் பலரும் இப்படி செய்யாதீர்கள் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என்றவாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News