வைரல் வீடியோ: கொஞ்சம் உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை சிலர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு மற்றொரு உதாரணமாக, கேரளாவைச் சேர்ந்த விவசாயி சுஜித் எஸ்பி இருக்கிரார். வெற்றியின் புதிய உச்சத்தை எட்டியுள்ள அவர், சமூக ஊடகங்களில் ‘வெரைட்டி ஃபார்மர்’ என்று பிரபலமாக அறியப்பட்டவர். அவர், தனது தனித்துவமான விவசாய முறைகளால் ஏராளமான பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ள அவர் இந்த முறை என்ன செய்தார் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முறை சுஜித் வைரலாவது அவரது விவசாயத்திற்காக அல்ல. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சமீபத்தில் அவர் ஆடிக் கார் ஓட்டி வரும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ​​சுஜித் எஸ்பி ஆடி ஏ4 ஓட்டிக் கொண்டு வருகிறார். இதில் வைரல் ஆக என்ன இருக்கிறது என்று தோன்றுகிறதா?


இந்த வீடியோவை பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்..



அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதற்கு முன் வெளியான ஒரு வீடியோவில் அவர் கீரையை அறுவடை செய்வது வெளியானது. இப்போது, அவர் பறித்த கீரைகளை சாலையோர சந்தையில் விற்க தனது ஆடி A4 இல் ஏற்றினார். கீரை ஏற்றிய ஆடிக் காரில் சந்தைக்கு வந்த அவர், சாலையில் பாயை வைத்து, வாடிக்கையாளர்களுக்கு கீரை விற்றார்.


மேலும் படிக்க | இணையத்தில் தீ பற்ற வைத்த ஆட்டம்: அந்த எக்ஸ்பிரஷன்... சான்சே இல்ல.. வைரல் வீடியோ


அவரது முகத்தில் உள்ள புன்னகை, இதயத்தின் நிம்மதியை வெளிப்படுதுகிறது. அந்த வீடியோவை போட்டோ ஷேரிங் ஆப்பில் பதிவிட்டுள்ள சுஜித் எஸ்பி, "நான் ஆடிக் காரில் சென்று கீரை விற்றபோது" என்று தலைப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவியது. இது இன்ஸ்டாகிராமில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


வைரலான வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக் போட்டு பாராட்டினார்கள்
பல இன்ஸ்டாகிராம் பயனர்கள் கேரள விவசாயியின் வெற்றியைப் பாராட்டினர். ஒரு நெட்டிசன் அந்த வீடியோவுக்கு லைக் போட்டுவிட்டு, "நான் காய்கறிகளை விற்பதற்கு முன்னார் ஆடி கார் வாங்க வேண்டும்" என்று எழுதினார்.


அனைத்து இந்திய விவசாயிகளும் இதுபோல் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புதிய காய்கறிகளை பயிரிட்டு விற்கவும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார் என்றால், மூன்றாவது கருத்து என்ன தெரியுமா? “ஆடியில் பெட்ரோல் நிரப்ப உங்களுக்கு பணம் கிடைத்ததாக நம்புகிறேன்” இது இன்றைய விவசாயிகளீன் நிலையைச் சொல்வதாக உள்ளது.


இன்ஸ்டாகிராம் பயனர்களில் ஒருவர், “நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு பலனளிக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது என்று எழுதியுள்ளார்.


வெரைட்டி ஃபார்மர் சுஜித் எஸ்பி, இதற்கு முன்பு வண்டி ஓட்டுநராக இருந்தார். பின்னர் விவசாயம் மீதான ஆர்வத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் இறங்கினார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பினால், பல விவசாய நுட்பங்களை கற்றுத் தேர்ந்தார்.


சுஜித் எஸ்பியின் ஆடி ஏ4  கார், ரூ 44 லட்சம் மதிப்புள்ள செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ