2 வயது மகனை 18 லட்சம் ரூபாய்க்கு விற்ற அப்பா அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது புதிய மனைவியுடன் உல்லாசமாக விடுமுறையை கழிக்க மகனை விற்ற பணத்தை பயன்படுத்தினார் என்ற தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காவல்துறையினர் விசாரித்தபோது, சிறுவனை குழந்தை இல்லாத தம்பதியினருக்கு 158,000 யுவான் (ரூ .18 லட்சம்) க்கு விற்றுவிட்டது தெரியவந்தது.


Also Read | உலகிலேயே அதிக செலவு பிடித்த விவாகரத்துகளில் ஒன்று Bill and Melinda divorce


சீனாவின் ஜெஜியாங்கில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் இது. சுற்றுலா செல்வதற்காக தனது இரண்டு வயது மகனை விற்ற தந்தையின் போக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், தந்தையை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். ஜெஜியாங் லீகல் டெய்லி பத்திரிக்கையில் வெளியான செய்தியின் படி Xie என்ற குடும்பப்பெயர் கொண்ட நபருக்கு, தனது இரண்டாவது மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை இருந்துவந்தது. 


மனைவியுடனான சண்டையை தீர்க்கவும், குழந்தையை பராமரிக்கும் சுமையில் இருந்து விலகவும் முடிவு செய்த அப்பா,   ஜியாஜியா (Jiajia) என்ற தனது 2 வயது விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.


Also Read | திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு


குழந்தையின் பெற்றோருக்கு விவாகரத்து ஏற்பட்ட பின்னர், குழந்தை தந்தையின் பராமரிப்பில் இருந்தது. தாயின் பராமரிப்பில் மற்றொரு பெண் குழந்தை சென்றது. வேறொரு நகரத்தில் பணியில் இருந்ததால், குழந்தையை தனது சகோதரர் லின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஹுஷோ நகரில் விட்டிருந்தார்.


சில நாட்களுக்கு முன்னதாக, ஸீ தனது மகனை தனது சகோதரர் லினிடமிருந்து அழைத்துச் சென்றார், முன்னாள் மனைவி, மகனை பார்க்க விரும்புவதாகக் கூறி குழந்தையை வாங்கிச் சென்றார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகும், சிறுவன் வராததால், குடும்ப உறுப்பினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


காவல்துறையினர் விசாரிணையில் தான் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாயின. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு 158,000 யுவான் (18 லட்சம் ரூபாய்) தொகைக்கு மகனை அப்பாவே விற்றிருக்கும் அவலம் தெரியவந்தது. அந்த பணத்தைக் கொண்டு தனது புதிய மனைவியை அழைத்துக் கொண்டு உல்லாசமாக ஊர் சுற்றியிருக்கிறார்.


ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR