Viral Video Of Dare Dog: சமூக ஊடகங்களில் பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்களின் பட்டியலில், ‘விலங்குகள்’ வீடியோவுக்கு தனி மவுசு உண்டு. நமது வாழ்க்கையுடன் நீக்கமற கலந்து விட்ட சமூக ஊடகங்கள், நன்மையையும், தீமையையும் ஒன்றாகவே கலந்து இருக்கின்றன. தொழில்நுட்பத்தால் இயங்கும் இணையதளங்கள், இணையம், தொழில்நுட்பங்கள் என அனைத்துமே நமது வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிட்டன, பற்பல அதிசயங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வீடியோ 


இணையத்தில் வினோதமான வீடியோக்களை மட்டுமா பார்க்கிறோம்? நாம் விருபம்பும் செய்திகள், அத்தியாவசியமான செய்திகள், காமெடி, சோகம், பயம், அதிசயம், அற்புதம் என பொழுதுபோக்குகளின் அனைத்து அம்சங்களையும் ரசிக்கிறோம். இணையத்தின் மூலம் உடனுக்குடன் நமக்குக் கிடைக்கும் செய்திகள் மட்டுமல்ல, வீடியோக்களும் உலக நடப்புகளை உடனுக்குடன் வழங்குகின்றன. 


மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 


பயனுள்ள பல தகவல்களுடன் ஜாலியாக சிரித்து மகிழவும் வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர். விலங்குகளின் சண்டை, காதல், பாசம், நேசம் மட்டுமல்ல, வேட்டையாடும் வீடியோக்களும் வைரலாகின்றன.


மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


சிங்க வேட்டை வீடியோ


இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வைரல் வீடியோவில், சீண்டும் நாய்களின் வீடியோக்கள் தற்போது டிரெண்டிங்கில் இருக்கின்றன. அந்த டிரெண்டிங் வீடியோவில், சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கங்களிடம் வம்படியாய் போய் வம்பிழுக்கும் நாய்க்குட்டியின் வீடியோ வைரலாகிறது.


இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?



வைரலாகும் இந்த வீடியோவில், காட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் விலங்குகளிடம் சென்று வம்பிழுத்து குரைத்து, குதிக்கும் நாயின் நிலை என்னவாகும் என்ற பயம் அனைவருக்கும் எழுகிறது. ஆனால் நாய்க் குட்டிக்கு இது பெரிய விஷயமாகத் தெரியவில்லை! இளம்கன்று பயமறியாது என்பதை உணர்த்தும் இந்த நாய், சிங்கங்களின் வீரியத்தை குறைவாக மதிப்பிட்டு விட்டதே என வருத்தமாக இருக்கிறது.   


மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்


ஆனால், மேய்ச்சலுக்காக விலங்குகளுக்கு பாதுகாப்பாக வந்திருக்கும் நாய், தனது கடமையை தவறாமல் செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கால்நடைகள் சற்றுத் தொலைவில் மேய்ந்துக் கொண்டிருப்பதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. வேட்டையாட வந்த சிங்கங்களும், நாயின் குரைப்பில் சற்று  பின்வாங்குவதையும் பார்க்க முடிகிறது.


ஆனால், வலுவான சிங்கங்களின் முன், நாயின் வீரம் எத்தனை நேரம் எடுபடும்? என்ற கேள்வியை எழுப்பும் வீடியோ இது.


மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ