'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Monkey Video: இத்தனை கியூட்டான திருடர்களா என நம்மை வியக்க வைக்கும் குரங்குகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 12, 2023, 06:41 PM IST
  • குரங்குகள் அன்பான மற்றும் வேடிக்கையான உயிரினங்கள்.
  • மிருகக்காட்சிசாலையிலோ அல்லது வேறு இடங்களிலோ அவற்றின் செயல்களைப் பார்த்தால், நம்மில் பலர் சிரித்துக்கொண்டே இருப்போம்.
  • குரங்குகள் தொடர்பான மற்றொரு வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.
'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கு, பாம்பு, யானை, சிங்கம், புலி, நாய், பூனை ஆகியவை சமூக வலைதளங்களை கலக்கும் மிருகங்களாகும். இவற்றின் வீடியோக்கள் கண்டிப்பாக இணையத்தில் ஹிட் ஆகின்றன. அதுவும் குரங்குகள் செய்யும் குறும்புகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

குரங்குகள் அன்பான மற்றும் வேடிக்கையான உயிரினங்கள். மிருகக்காட்சிசாலையிலோ அல்லது வேறு இடங்களிலோ அவற்றின் செயல்களைப் பார்த்தால், நம்மில் பலர் சிரித்துக்கொண்டே இருப்போம். குரங்குகள் தொடர்பான மற்றொரு வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு சாலையோர கடையிலிருந்து குரங்கு கூட்டம் ஒன்று ஆப்பிள்களை திருடிக்கொண்டு ஓடுவதை காண முடிகின்றது.

இந்த வீடியோ கண்டிப்பாக காண்பவர்களுக்கு உற்சாகத்தை அளித்து அவர்களை சிரிக்க வைக்கும். இந்த வேடிக்கையான வீடியோ நம்மை மறந்து நம்மை புன்னகைக்க வைக்கும் என்றால் அது மிகையல்ல. 

மேலும் படிக்க | ஆட்டம் போட்ட பாம்பு, அசால்டாய் பிடித்து அடைத்த பெண்: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ் 

கில்லாடி குரங்குகளின் மாஸ் கொள்ளையை இந்த வீடியோவில் காணலாம்:

தற்போது வைரலாகும் வீடியோவில், பல குரங்குகள் பழக் கடையில் இருந்து ஆப்பிள்களை திருடிச் செல்வதைக் காணலாம். இந்த வேடிக்கையான காட்சி ஒட்டுமொத்த இணையத்தையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை Buitengebieden என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு இதுவரை 761,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். பலர் இதை வங்கிக்கொள்ளை தொடர்பான ஓடிடி சீரிசான Money Heist உடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: திட்டம் போட்டு திருடிய மனைவி; வசமாக சிக்க வைத்து சென்ற கணவன்... செம காமெடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News