ஆதரவற்ற குழந்தையை அரவணைக்கும் பெண் போலீஸ்! வைரலான வீடியோ!
ஆதரவற்ற குழந்தையை தமிழக பெண் போலீஸ் ஒருவர் அரவணைத்து கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது குழந்தை கடத்தல், குழந்தைகளை ஆதரவற்ற நிலையில் கைவிடுதல் போன்ற குற்றங்கள் பெருகி வருகிறது. அவ்வாறு நிர்கதியாய் விடப்படும் குழந்தைகளில் சில பேர் அரவணைப்பில் நல்லவிதமாக வளர்கின்றனர், சிலர் கயவர்களின் கையில் அகப்பட்டு சீரழிகின்றனர். அதேபோல ஆதரவற்று கிடைத்த ஒரு குழ்நதையை தமிழகத்தை சேர்ந்த பெண் போலீசார் (Police) ஒருவர் பாசத்துடன் பராமரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!
கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரஸ்வதி தம்பதியர் புதுச்சேரியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது அவர்களுடன் பேருந்தில் கையில் நான்கு மாத குழந்தையுடன் சக பயணி ஒருவரும் எறியுள்ளார். பேருந்தில் அன்றைய தினம் கூட்ட நெருக்கடி அதிகமாக இருந்த காரணத்தினால் குழந்தையை தன்னால் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று அவர்களுடன் ஏறிய அந்த குறிப்பிட்ட பயணி சீட்டில் அமர்ந்திருந்த சரஸ்வதியிடம் குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.
பச்சிளம் குழந்தை என்பதால் சரஸ்வதியும் மறுப்பு தெரிவிக்காமல், குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை சரஸ்வதியின் மடியில் தூங்கிவிட்டது, பின்னர் அக்குழந்தைக்கு டயபர் மாற்ற வேண்டிய தேவை இருந்ததால், சரஸ்வதி அந்த நபரை பேருந்திற்குள் தேடினார், ஆனால் பேருந்திற்குள் அவரை எங்கும் காணவில்லை. பின்னர் அந்த நபர் பேருந்தில் இருந்து ஏற்கனவே இறங்கிவிட்டதாக சக பயணிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் இதுகுறித்து கூறினார்.
உடனடியாக பேருந்து டிரைவர் விழுப்புரம் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பேருந்தை நிறுத்தினர். அதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரஸ்வதி அந்த குழந்தையை போலீசில் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை இவர்களிடம் கொடுத்த நபர் யார் என்று விசாரணையை நடத்த தொடங்கினர். அந்த சமயத்தில் காவல்நிலையத்தில் உள்ள பெண் போலீசார் ஒருவர் அந்த குழந்தையை (Children) குளிப்பாட்டி, அதற்கு புதிய டயப்பர் மாற்றி, புது ஆடைகளை அணிவித்து அந்த குழந்தையை பாசமாக கொஞ்சினார். பெண் போலீசாரும், புகார் கொடுக்க வந்த சரஸ்வதியும் இணைந்து அந்த குழந்தையை அரவணைப்புடன் கொஞ்சிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி, நெட்டிசன்களின் கவனத்தி வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பெண் போலிஸாரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
ALSO READ | திருமண பந்தத்தில் இணைந்த ஓரின சேர்க்கையாளர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR