பாலியல் தொழிலை விட்டுடுங்க -  திருநங்கைகளுக்கு காவல்துறை வேண்டுகோள்!

அரசு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது, மாற்று தொழிலில் ஈடுபடுங்கள் என திருநங்கைகளுக்கு காவல்துறை அறிவுரை கூறியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2022, 10:01 AM IST
  • திருநங்கைகளின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • சட்டத்தை மதித்து நடக்கவில்லை என்றால் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்
பாலியல் தொழிலை விட்டுடுங்க -  திருநங்கைகளுக்கு காவல்துறை வேண்டுகோள்!  title=

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளிடம் அத்துமீறும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநங்கைகளின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனைத்து திருநங்கைகளும் (transgender) அழைத்து காவல்துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.  இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கூடுதல் துணை ஆணையர் கும்மராஜா, உதவி கமிஷனர் முருகேசன், ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கந்தவேல் ஆகியோர் திருநங்கைகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். 

ALSO READ | பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை?

திருநங்கைகள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு (TN Government) பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தாங்கள் அனைவரும் முறையாக சங்கத்தில் பதிவு செய்து நிதி உதவி பெற்று சமுதாய மதிக்கும் வகையில் தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். இதுவரை மூன்று முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது, காவல்துறை கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதனை மறந்து தவறான பாதைக்கு செல்கிறீர்கள். பாலியல் தொழிலை கைவிட வேண்டும், பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள், நீங்கள் திருந்தி வாழ வேண்டும். எனவே அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களை பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். 

salem

கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள் தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்றும் தங்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு அனைவராலும் ஏளனபேச்சுக்கு ஆளாகுவதாக கண்கலங்கினார். இதற்கு பதில் அளித்து பேசிய காவல்துறையினர் சட்டத்தை மதித்து நடக்கவில்லை என்றால் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதற்கு திருநங்கைகள் இனிமேல் இதுபோன்ற தவறான பாதைக்கு செல்ல மாட்டோம் என்றும் தவறு.செய்பவர்களை பிடித்து கொடுப்பதாக அனைவரும் உறுதி அளித்தனர்.

salem

ALSO READ | கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத்துகிறது - முத்தரசன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News