ஒட்டகச்சிவிங்கி சண்டை வீடியோ: பல்வேறு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒட்டகச்சிவிங்கிகளின் வீடியோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன.  ஆனால் ஒட்டகச்சிவிங்கிகளின் வீடியோக்கள் போஸ்ட் செய்யப்பட்டால் அவை உடனேயே வைரலாகி விடுகின்றன. ஒட்டகச்சிவிங்கிகள் நீண்ட கழுத்து, நீண்ட கால்கள் மற்றும் நீண்ட நாக்கிற்கு பெயர் பெற்றவை. ஒட்டகச்சிவிங்கி மிகவும் கூச்ச சுபாவமுடையது என்றாலும், அவற்றை கிண்டல் செய்தால், அவை மிகவும் ஆபத்தானவையாகிவிடும். தங்களை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க இவை தங்கள் கால்களைப் பயன்படுத்துகிறது என்றும், இவை தங்கள் காலால் ஒரு அடி அடித்தால் சிங்கம் போன்ற விலங்குகளையும் கொல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.இப்போது இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் சம்பந்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒட்டகச்சிவிங்கிகளுக்கு இடையே சண்டை


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வனப்பகுதியை கடந்து செல்லும் சாலையில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் நேருக்கு நேர் வருவதை காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் சண்டை இடத் தொடங்குகின்றன. 


மேலும் படிக்க | ஷூவில் ஒரு 'ஷ்ஷ்...' சத்தம்: பேசிப்பேசியே பாம்பை படிய வைத்த பெண்


விடியோவில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் கழுத்து முகம் கொண்டு தீவிர சண்டையில் ஈடுபடுவதை காண முடிகின்றது. விசாலமான ஒட்டகச்சிவிங்கிகள் ஒய்யாரமாய் நின்றுகொண்டு சலனமில்லாமல் சண்டியிடுவது பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை அமைதியாக இருந்தாலும், அதில் ஆக்கிரோஷத்தை காண முடிகின்றது. 


வீடியோவில், அந்த வழியில் வனப்பிரதேசத்தை சுற்றி பார்க்க வந்தவர்கள் ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டையை பார்த்து பிரமிப்பதை அவர்கள் எழுப்பும் குரல்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. காண்பதற்கு மிக அரிதான ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை அவர்களை வியக்க பைக்கிறது.


காணக்கிடைக்காத ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை வீடியோவை இங்கே காணலாம்: