இயற்கையின் படைப்பில் நம்ப முடியாத அல்லது மனித கண்களுக்கு சிக்காத ஏராளமான படைப்புகள் இன்னும் இந்த உலகில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்லாது கடலுக்கு அடியில், பனிப்பிரதேசங்களில் இருக்கும் அந்த உயிரினங்கள் எப்போதுதாவது மனிதக் கண்களில் சிக்கும். அப்போது அவற்றை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் பத்தாது. அதாவது, அந்தளவுக்கு பிரம்ப்பின் உச்சத்துக்கே சென்றுவிடுவோம். ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரை இன்னும் இந்த உலகில் இருக்கும் படைப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அயராது நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிராங்க்கா செய்ற இந்தா வாங்கிக்கோ! பஞ்சரான யூடியூபரின் காது; வைரல் வீடியோ


பசுபிக் பெருங்கடலில் இருக்கும் உயிரினத்தை, அட்லாண்டிக் பெருங்கடலில் பார்க்க முடியாது. ஆர்டிக் துருவத்தில் பார்க்கும் விலங்குகளை வங்காளவிரிகுடாவில் பார்க்க முடியாது. பரந்துவிரிந்த இந்த உலகில் எத்தனை எத்தனையோ அதியங்களும்,அதிசய பிறவிகளும் இருக்கின்றன. அப்படியான அதியச உயிரினம் ஒன்றின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அது நடக்கும் மீன். மீன் நீந்த மட்டுமே செய்யும், அதனால் நிலத்தில் வாழ முடியாது என்பது தான் எல்லோருடைய பொதுவான எண்ணம்.



ஆனால், நிலத்திலும் நடக்கும் மீன் ஒன்று இருக்கிறது. பனிப்பிரதேசம் ஒன்றில் கடலில் இருந்து வெளியே வந்த மீன் பனிக்கட்டிகள் மீது நடக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வியப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளனர். ஆய்வாளர்கள் இந்த மீன் குறித்து சொல்லும்போது, நடமாடும் மீன் என தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த மீன்களால் நிலத்தின் மீது இருக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Viral News: 2 வயது சிறுவனை விழுங்கிய பின் வெளியில் துப்பிய நீர் யானை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ