மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..
Funny Cow Interview Viral Video : குழந்தை ஒன்று, மாட்டிடம் கேள்வி கேட்டு எடுத்திருக்கும் நேர்காணல், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Funny Cow Interview Viral Video : குழந்தைகள், எது செய்தாலும் அழகுதான். உயரத்தில் வளர ஆரம்பிக்கும் முன்னரே, இவர்கள் எண்ணத்திலும், செயல்களிலும், கற்பனை திறன்களிலும் வளர ஆரம்பித்து விடுகின்றனர். பெற்றோரால் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்யும் இவர்கள், பல சமயங்களில் தங்களை அறியாமல் ஆபத்தான விஷயங்களை செய்து, தன்னை பார்த்துக்கொள்பவர்களுக்கு பகீர் கிளப்புவர்.
ஒரு சில குழந்தைகள், ரொம்ப சீரியஸாக செய்யும் விஷயங்களும், பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். குழந்தைகள் அனைவரிடமும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம், இவை மனிதர்கள் மட்டுமன்றி மிருகங்களிடமும் அதிக அன்புடன் இருக்கும். அதுவும் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, முயல், கிளி, மாடு உள்ளிட்டவற்றுடன் அதிக நட்பு பாராட்டும்.
மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஜ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!
மாட்டை நேர்காணல் செய்த சிறுமி:
அழகான வெள்ளை நிற ஆடை அணிந்த குட்டி குழந்தை ஒன்று, செய்தி நிருபர் போல நிகழ்ச்சி நடத்துகிறார். அதில் விருந்தினராக மாட்டை அழைத்து அதனிடம் “ம்மா..” என்று மாட்டின் பாஷையிலேயே கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த மாடும், திரும்ப “ம்மா..என்று கத்துகிறது.