`நான் பாட்டி இல்லடா, பாகுபலி`: மாஸ் காட்டும் பாட்டியின் வைரல் வீடியோ
Funny Viral Video: பாட்டியின் மாஸ் வெயிட் லிஃப்டிங்க் பார்த்து ஆச்சரியம் அடைந்தது பாட்டியின் பேரன் மட்டுமல்ல, இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் வாயடைத்துதான் போகிறார்கள்.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ சற்று வித்தியாசமானது. இந்த பாட்டியின் பேரன் பாட்டிக்கு ஃபிட்னஸ் சவால் அளிக்கிறார். ஆனால், பாட்டியின் ஃபிட்னஸ் லெவல் அவரை திக்குமுக்காட வைக்கிறது. சில மணிநேரங்களில் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. நெட்டிசன்களும் இதை மிகவும் விரும்பி பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.
பாட்டிக்கு சவால் விட்டு மாட்டிக்கொண்ட பேரன்
வெளியாகியுள்ள வீடியோவை பார்க்கும்போது, ஒரு இளைஞர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிகிறது. அவர் புஷ்-அப் எடுத்து எடை தூக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். அப்போது அவரது 80 வயது பாட்டி ஏதோ வேலைக்காக மொட்டை மாடிக்கு வருகிறார்.
மேலும் படிக்க | ஓடும் பைக்கில் செல்ஃபி எடுக்க போய் சொதப்பிய நபரின் வைரல் வீடியோ
பாட்டியை பார்த்த பேரன், விளையாட்டாக அவருக்கு ஃபிட்னஸ் சவால் அளிக்கிறார். இதன்பிறகு, வீடியோவில் நாம் காணும் காட்சிகளை நம்மால் நம்ப முடியாது. பேரன் விடுத்த சவாலை பாட்டி உடனடியாக ஏற்றுக்கொள்கிறார். அடுத்த நிமிடமே அவர் பேரனுக்கு அருகில் சென்று எடையை தூக்கி, வெயிட் லிஃப்டிங்க் செய்து பேரனை ஆச்சரியப்படுத்துகிறார்.
உண்மையில், ஆச்சரியம் அடைந்தது பாட்டியின் பேரன் மட்டுமல்ல, இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் வாயடைத்துதான் போகிறார்கள்.
மாஸ் காட்டும் பாட்டியின் வீடியோவை இங்கே காணலாம்: