பொறாமையில் பொங்கிய பூனைக்குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நீ இனிமேல் என் குழந்தை இல்லை என்று சொன்னதும் பூனைகுட்டி செல்லமாக கோவப்பட்டு செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2022, 08:45 PM IST
பொறாமையில் பொங்கிய பூனைக்குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ! title=

குழந்தைகள் எப்படி அதன் பெற்றோரிடம் பாசமாக இருக்குமோ அதே போல தான் வளர்ப்பு பிராணிகளும் அதனை வளர்ப்பவர்களிடம் அதிக பாசமாக இருக்கும்.  அதுபோல தான் இங்கு வைரலாகும் ஒரு வீடியோவில் பூனைக்குட்டி ஒன்று அதனை வளர்ப்பவர்களிடம் கொஞ்சம் பொறாமையுடன் செல்லமாக கோபித்துக்கொள்ளும் சம்பவம் இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு இருக்கிறது.  நாம் அன்றாடம் இணையத்தளங்களில் காணும் பல கண்கவர் காட்சிகள் மனதுக்கு இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது, அதிலும் குறிப்பாக இதுபோன்ற காட்சிகள் மென்மேலும் இதயங்களை இலகுவாக்குகிறது.

மேலும் படிக்க | ’சோதிக்காதீங்கடா.....சோதீக்காதீங்க’ நாயின் மைண்ட்வாய்ஸ் வைரல் வீடியோ

ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், பெண் ஒருவர் சோஃபாவில் அமர்ந்துகொண்டு மடியின்மீது பூனைக்குட்டி ஒன்றையும் வைத்து கொண்டு இருக்கிறார்.  அவர் அந்த பூனைக்குட்டியிடம், இனிமேல் நான் உன்னை பேபி என்று அழைக்கமாட்டேன், ஏனெனில் உண்மையான பேபி இங்கு வந்துவிட்டது, இனிமேல் நீ பேபி கிடையாது என்று கூறுகிறார்.  அவர் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த பூனைக்குட்டி உடனடியாக தனது தனது கையால் அந்த பெண்ணின் வாயை மூடுகிறது.  அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் பூனைக்குட்டியின் அருகே வந்து நீதான் என்னுடைய பேபி என்று கொஞ்சுகிறார், உடனே அந்த பூனைக்குட்டியும் அவருடன் சென்றுவிடுகிறது.

 

இந்த அற்புதமான வீடியோவினை இதுவரை எம்பத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த வீடியோ பெற்றுள்ளதோடு, இணையவாசிகள் இந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News