வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் வேடிக்கையான வீடியோக்களால் நிறைந்துள்ளது. இங்கு தினமும் ஏதாவது ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. ஒரு நபரின் வீடியோ இப்போது பல்வேறு தளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த நபர் சொல்லும் விஷயங்களைக் கேட்டவுடன் சிரிப்பை அடக்குவது மிக கடினம். வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பீர்கள். இந்த வீடியோ ஜார்கண்டில் மாநிலத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நபரிடம் எப்படிப்பட்ட பெண்ணை விரும்புவீர்கள் (What kind of girl do you want?) என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில் அனைவரின் புருவத்தை உயர்த்தி உள்ளது. மேக்கப் போட்டக்கொண்டு அழகுடன் இருக்கும் ஒரு பெண் தான் எனக்கு வேண்டும். உதட்டில் சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் கண்ணில் மை வைத்திருக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு பேண்ட், ஜீன்ஸ் அணிய தெரிந்திருக்க வேண்டும் என கூலாகக் கூறுகிறார். 


 



வீடியோவில் மேலும் அந்த நபர் சொல்வது மிகவும் வேடிக்கையாக (funny video) இருக்கிறது. இது தவிர, அந்த பெண் குண்டாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஒல்லியாக இருக்கும் ஒரு பெண்ணால் கடினமாக வேலைகளை செய்ய முடியாது. அதாவது அவளால் வீட்டில் அதிக வேலை செய்ய முடியாது என்றார். 


ALSO READ | Viral Video ‘நாங்க வேற மாதிரி’ திருமணத்துக்கு வந்த மணமகன், மணமகள்


மேலும் தனக்கு விருப்பமான பெண் எங்கிருந்து வர வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதாவது அந்தப் பெண் ராஞ்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதேநேரத்தில் மும்பையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அந்த பெண் அழகா இருக்க வேண்டும். அந்த பெண்ணின் பெயர் ரவீணா டாண்டன் போல இருக்க வேண்டும் என்றார். 


இந்த வீடியோ (Viral Video) சமூக ஊடக தளமான Instagram பக்கத்தில் bhutni_ke_memes என்ற பெயரில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுவும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.


ALSO READ | Viral Video: கழிப்பறைக்குள் புகுந்த சிங்கம் அடுத்து நடந்தது என்ன? Watch


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR