வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா வைரலாகும் IPL ரசிகர்
போட்டியில் பிடித்த அணி தோற்பதை பார்த்த இளைஞன் செய்த செயலைப் பார்த்தால் சிலருக்கு கடுப்பாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு பிடித்திருக்கிறது.
Funny Video: போட்டியில் பிடித்த அணி தோற்பதை பார்த்த இளைஞன் செய்த செயலைப் பார்த்தால் சிலருக்கு கடுப்பாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு பிடித்திருக்கிறது.
இந்த வீடியோ மும்பை இந்தியனின் ரசிகர்களுடன் தொடர்புடையது. ஆனால் தனது அணி ஆட்டத்தில் தோற்றதைக் கண்டு வருத்தப்பட்ட அந்த ரசிகர், உடனடியாக அணியை மாற்றிவிட்டார்.
இந்தியன் பிரீமியர் லீக் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சமயத்தில் இது தொடர்பான பல வேடிக்கையான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் சில மிகவும் வேடிக்கையானவை, பார்த்தால் சிரிப்பை நிறுத்துவது கடினம்.
மேலும் படிக்க | IPL2022: சண்டை போட்டுக்கொண்ட சாஹல் - குல்தீப்
தற்போது இதுபோன்ற ஒரு வீடியோ பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோ மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடர்புடையதாக தெரிகிறது.
இதில், ஒரு இளைஞன் தனக்கு பிடித்தமான மும்பை இந்தியனின் ஜெர்சியை அணிந்து ஸ்டாண்டில் ஆரவாரம் செய்கிறான்.
கட்சி மாறிய ரசிகர்
ஆனால், இப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் தோற்கும் என்ற நிலை வந்தவுடன். அந்த இளைஞன் தனது ஜெர்சியைக் கழற்றினார்.
மேலும் படிக்க | பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ
இளைஞன் ஜெர்சியை கழற்றியவுடன், உள்ளே சென்னை சூப்பர் கிங்ஸின் ஜெர்சியை அணிந்திருந்ததைக் பார்த்தால் ஆச்சாரியமாக இருந்தது.
சில நொடிகள் முன்பு வரை மும்பைக்கு ஆதரவு கொடுத்துவந்த ரசிகன், நிலைமை மாறியதும் கட்சி மாறி சிஎஸ்கேவை ஆதரிக்க ஆரம்பித்தது வேடிக்கையாக உள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்து பலரும் சிரிக்கின்றனர்.
புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது
ஐபிஎல் போட்டிகள் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
லீக்கில் உள்ள அனைத்து பத்து அணிகளும் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளி அட்டவணையில் நிலைமையும் மெதுவாக தெளிவடையத் தொடங்குயிருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தில் உள்ளது. லீக்கில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் சென்னை அணி 7 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க | ரிஷ்ப் பன்டுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்ட அஸ்வின் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR