Funny Viral Video : மிருகங்கள் எதை செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். இவற்றின் செயல்களும், செல்ல சேட்டைகளையும் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் நாய்கள் செய்யும் விஷயங்களோ, கொள்ளை அழகு. அந்த வகையில், ஒரு வீட்டு நாய் தனது உரிமையாளரின் சரக்கை எடுத்து குடித்து விட்டு, போதையில் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு வீட்டு நாய் தள்ளாடி நடக்கிறது. அதன் பின் யாரோ சிலர் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது. அதன் பிறகு அந்த வீடியோவில் காலியான ஆல்கஹால் பாட்டிலும் காண்பிக்கப்படுகிறது. இதில் பேசும் அந்த ஒனர், அந்த பாட்டில் ஃபுல் ஆக இருந்ததாகவும் தற்போது காலி ஆக்கப்பட்ட நிலையில் பாட்டிலுடன் சேர்ந்து நாயும் உருண்டு கொண்டிருந்ததாகவும் கூறுகிறார். இது, வாட்கா பாட்டில் என்றும் அதில் பேசுகிறார். 



இந்த வீடியோவை பார்த்த சிலர், மனிதர்களை போல, இந்த நாயும் குடித்து விட்டு நடந்து கொள்வதாக கூறுகின்றனர். 


நெட்டிசன்களின் கருத்து!


எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த 37 வினாடிகள் வீடியோ தற்போது வரை 2 மில்லியன் வியூஸ்கள் போயுள்ளது. 211 கமெண்டுகள், பல ரீ-ஷேர்கள், பல ஆயிரம் லைக்ஸ்களை தாண்டி இந்த வீடியோ நெட்டிசன்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. 


ஒரு சிலர், நாய்க்கு ஹேங்க் ஓவர் ஆகியிருக்கும் என்று கூற, இன்னும் சிலர் ஆல்கஹால் அந்த நாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று கூறி வருகின்றனர். அதனால், கவனக்குறைவாக இது போன்று ஆங்காங்கே மது பாட்டிலை வைக்க வேண்டாம் என சிலர் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | சீச்சீ! அப்பாவே மகளை திருமணம் செய்து கொண்ட அவலம்..என்னங்க நடக்குது இங்க?


மேலும் படிக்க | திகில் விடியோ! சென்னை மழையால் தரையிரங்க அவதிப்பட்ட விமானம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ