பறவைகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. இந்த அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பறவைகளின் வேடிக்கை தருணங்கள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் துனம் தினம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். அந்த வகையில், புழுவை பிடித்து சாப்பிடத் தெரியாமல் குழம்பித் தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் வீடியோ வைரலாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது குஞ்சுகளுக்கு, தாய் பறவை உணவை கொண்டு வந்து ஊட்டி விடும். அதற்கு வாயைத் திறந்தால் போதும். இந்நிலையில், தானே வேட்டையாடி உண்ணும் நிலை வந்த போது, எப்படி பிடிக்க வேண்டும் எனத் தெரியாமல் குழம்பி தவிக்கிறது ஒரு குஞ்சுப் பறவை. முதலில் இரையை தானே பிடிக்க தயாரான ஒரு பறவைக் குஞ்சிற்கு பாவம், புழுவை பிடிக்க வேண்டும் எனத் தெரியாமல், வாயை திறந்த படி அதன் பின்னே ஓடுகிறது. அது புழுவிற்கு பிடித்த நல்ல நேரம் என தான் கூற வேண்டும். தனது பசியாற அதனை பிடித்து சாப்பிட வேண்டும் என தெரியாமல், தவிக்கும் பறவைக் குஞ்சை பார்த்து நெட்டிசன்கள் பரிதாபபட்டனர்.


வைரலாகும் பறவை வீடியோவை கீழே காணலாம்:




மேலும் படிக்க | காக்காவை அந்தரத்திலேயே வேட்டையாடிய பாம்பு... ஷாக் ஆக்கும் வைரல் வீடியோ


இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரல் (Viral Video) ஆகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், சில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எனினும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கக் கூடிய அழகிய வீடியோக்கள் ரசிகரிகளை பெரிதும் ஈர்க்கின்றன என்றால் மிகையில்லை.


இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | முயலை உயிரோடு முழுங்கும் கடல் புறா வீடியோ வைரல்