சொர்க்கவாசல்: இருண்ட வானத்தில் தோன்றிய ஒரு காட்சி ஒன்று மிகவும் வைரலாகியுள்ளது. 38 வயதான டவராஸ் பிரின்சன், கடந்த வாரம் (மே 6) வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​பைபிளில் எழுதப்பட்டுள்ள சொர்க்கத்தின் வாசல் காட்சியை காண்டார். ஆம்....  இருண்ட மேகங்கள் வழியாக ஒரு வெள்ளை ஒளி  ஊடுருவதை பார்த்த போது,  அவருக்கு சொர்க்க வாசல் நினைவுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்மீக அனுபவம்


டவராஸ் பிரின்சன் அந்த தருணம் ஒரு 'ஆன்மீக அனுபவத்தை' கொடுத்தது என்று நம்புகிறார். கடவுள் நம்மைச் சுற்றி இருக்கிறார் என்பதற்கான அடையாளம் என்று அவர் நம்பினார். அவர் இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட நிலையில், இது கிட்டத்தட்ட 10,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.


ஆசீர்வதிக்கப்பட்ட  உணர்வு


இருண்ட வானத்த்தில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் புளோரிடாவின் பிராடென்டன் மீது ஒளிரும்  காட்சியை, அந்த அற்புதமான தருணத்தை கேமராவில் பதிவு செய்ததை "பாக்கியமாக" உணர்ந்ததாக பிரின்சன் கூறினார். சொர்க்கத்தின் வாசல் திறப்பது போல் அது இருந்தது' என்றார்.


டவராஸ் பிரின்சன் தனது பதிவின் கருத்துப் பிரிவில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் அதில், ' மிகவும் இருட்டாக இருந்த நிலையில், திடீரென்று வானத்தில் ஒரு பிரகாசமான துளை திறக்கப்பட்டது. ஆச்சரியமாக இருந்தது, கடவுள் திரும்பி வருகிறார் என்று நினைத்தேன். நான் கடவுளை நம்புகிறேன், அது ஒரு ஆன்மீக அனுபவம் என்று நான் நம்புகிறேன். இது போல் நான் இது வரை பார்த்ததேயில்லை. நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அதைப் பார்த்ததும் அதை வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் 30-40 நிமிடங்கள் அங்கேயே இருந்தோம், அது நீண்ட நேரம் வானத்தில் இருந்தது. அது ஒரு நட்சத்திரம் அல்ல, அசாதாரணமான ஒரு நிகழ்வு இது.'


வைரலான வீடியோவை கீழே காணலாம்:



மேலும் படிக்க | விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!


இந்தப் பதிவின் கமெண்டுகளில் பலரும் அதனை பார்த்து வியந்து கருத்து வருகின்றனர். அதே சமயம் சிலர்  இதனை அறிவியலுடன் இணைத்து பார்க்கிறார்கள். இது குறித்து கூறிய தவராஸ் பிரின்சன் எழுதியுள்ளார், 'இது ஒரு ராக்கெட் ஏவுதல் என்று மக்கள் சொன்னார்கள், ஆனால் எனக்குத் தெரியாது. நான் இதற்கு முன்பு ராக்கெட் ஏவுவதைப் பார்த்திருக்கிறேன், அவை அப்படி இல்லை. அது ஒரு பைபிள் காட்சி தான்’ என்று பதிவிட்டுள்ளார்.


எனினும் பிரின்சன் இந்த காட்சியை கண்ட நேரத்திற்கு சரியாக ஒன்பது நிமிடங்களுக்கு முன்பு, அன்று காலை 5.42 மணிக்கு புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் பால்கன் 9 ஐ ஏவியது என்பதை விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உறுதிப்படுத்தியது. ஸ்பேஸ்எக்ஸின் மே 6 ஏவுதலை அடுத்து, நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் பணிக்கு ஆதரவாக 52 செயற்கைக்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  இது உலகளாவிய இணைய கவரேஜை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR