Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை

அரியவகை ஆண்குறி செடியை பறிக்க வேண்டாம் என கம்போடிய அரசு மக்களை எச்சரிக்கும் வீடியோ வைரல்... ஆண்குறி செடியுடன் செல்ஃபி எடுக்கும் பெண்களின் போஸ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2022, 11:58 AM IST
  • ஆண்குறி செடியின் அழகான தோற்றம்
  • ஆண்குறி செடியுடன் செல்ஃபி எடுக்கும் பெண்களின் போஸ் வைரல்
  • பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை
Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை title=

இயற்கையின் வண்ணங்களும் படைப்புகளும் மிகவும் அரிதானவை. அவற்றை அறிந்து கொள்வது மனிதர்களால் முடியாது. உலகில் நாம் அறியாத பலவகை செடிகளும் தாவரங்களும் எண்ணற்று வளர்ந்து செழித்து பல்லுயிரை பன்படுத்துகின்றன.

கம்போடியாவில், மனிதனின் ஆண்குறியின் வடிவத்தில் இருக்கும் அரியவகைத் தாவரம் ஆச்சரியமளிக்கிறது. அரியவகை ஆண்குறி செடியுடன் பெண்கள் போஸ் கொடுத்த பிறகு அதை பறிக்க வேண்டாம் என கம்போடிய அரசு மக்களை வலியுறுத்தும் வீடியோ வைரலாகிறது.

ஆண் ஒருவரின் பிறப்புறுப்பைப் போன்றே தோற்றமளிக்கும் செடியை மூன்று பெண்கள் பறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வைரல் வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

எனவே, கம்போடிய அரசு, அரியவகை இயற்கை தாவரங்களை அழிந்துவிட வேண்டாம் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | 'ஜஸ்ட் மிஸ்' பிரேக் பிடிக்காத கப்பல் - வைரல் வீடியோ

நெதர்லாந்தின் டச்சு நகரான லைடன் நகரில் உள்ள தாவரவியல் பூங்காவில் கடந்த ஆண்டு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அரிய வகை ‘ஆணுறுப்புச் செடி’ பூத்தது. 

நிபுணர்களின் கூற்றுப்படி, ஐரோப்பாவில் 'Amorphophallus decus-silvae' என்று பெயரிடப்பட்ட இந்த தாவரம், மூன்றாவது முறையாக பூத்தது. மேற்கு கம்போடியாவின் மலைப் பகுதியில் இந்த இயற்கை அரியவகைத் தாவரம் ‘நேபெந்திஸ் ஹோல்டேனி’ (Nepenthis holdeni) காணப்படுகிறது.

இந்தத் தாவரங்கள், குறைந்த ஊட்டச்சத்துள்ள மண்ணில் உயிர் வாழும் தன்மை கொண்டது.  பூச்சிகளை ஈர்க்கும் வகையிலான தேன் மற்றும் இனிமையான வாசனையைப் பயன்படுத்தி அவற்றை இரையாக்குகின்றன.  

கம்போடிய நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம், வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “அவர்கள் செய்வது தவறு, எதிர்காலத்தில் அதை மீண்டும் செய்ய வேண்டாம்! இயற்கை வளங்களை நேசித்ததற்கு நன்றி, ஆனால் அவற்றை பறிக்காதீர்கள், அவை பாழாகிவிடும்!” என்று எச்சரிக்கைக் கலந்த வேண்டுகோளை வெளியிட்டுள்ளது.

கம்போடியாவின் கம்போட் மாகாணத்தில் உள்ள போகோர் மலையில் பூத்திருக்கும் அரியவகை பூக்களை மூன்று பெண்கள் பறிக்கும் வீடியோ வைரலானது.

சமீப ஆண்டுகளில், உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் வித்தியாசமாக தோற்றமளிக்கும் தாவரங்களை பார்த்தால், அவற்றுடன் செல்ஃபி எடுத்து , சமூக ஊடகங்களில் பதிவிடுவது அதிகமாகிவிட்டது.  

மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 

தனியார் நிலங்களில் விவசாய விரிவாக்கம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி காரணமாக கம்போடியாவில் தாவரங்களின் இயற்கையான வாழ்விடங்கள் குறைந்துவிட்டதாக, கம்போடியன் ஜர்னல் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் 2021 ஆம் ஆண்டு ஆய்வை மேற்கோள் காட்டி சயின்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

தாவரங்களின் தோற்றம் "வேடிக்கையாக" இருந்தாலும், அவற்றை எடுப்பது அவற்றின் உயிர்வாழ்வை பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின் படி, அமார்போபல்லஸ் டெகஸ்-சில்வா "ஆணுறுப்பு தாவரம்" என்று அழைக்கப்படும் ஆறரை அடி உயரமுள்ள செடி கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பாவில் பூத்தது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் உள்ள ஹோர்டஸ் பொட்டானிகஸ் என்ற இடத்தில், நிமிர்ந்த ஆணுறுப்பைப் போல தோற்றமளிக்கும் இந்தச் செடியைப் பார்க்க மக்கள் பெருமளவில் கூடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News