வைரல் புகைப்படம்: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித புகைப்படங்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


காற்றில் தொங்கிக் கொண்டு கிளியை வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்தப் படம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க | முதலையை விழுங்கும் மலைப்பாம்பு: திகிலூட்டும் வீடியோ வைரல் 


ஆஸ்திரேலியாவில் உள்ள பாம்புகளை அகற்றும் வணிக நிறுவனமான சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ் 24/7 இல் (Sunshine Coast Snake Catchers 24/7) பணிபுரியும் ஸ்டூவர்ட் மெக்கென்சி, சமூக ஊடகங்கமான ஃபேஸ்புக்கில் பாம்புகளின் படங்களை வெளியிட்டார்.