முதலையை விழுங்கும் மலைப்பாம்பு: திகிலூட்டும் வீடியோ வைரல்

Scary Python Video: பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மலைப்பாம்பு முதலையை கவ்விக்கொள்கிறது. இரண்டு நிமிடங்களில் அதை முழுவதுமாக விழுங்கி விடுகிறது. சத்தம் இல்லாமல் பெரிய யுத்தம் நடந்து முடிகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 04:19 PM IST
  • மலைப்பாம்பு மற்றும் முதலையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
  • மலைப்பாம்பு முதலையை முழுவதுமாக விழுங்கி விடுகிறது.
  • சத்தம் இல்லாமல் பெரிய யுத்தம் நடந்து முடிகிறது.
முதலையை விழுங்கும் மலைப்பாம்பு: திகிலூட்டும் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இப்போது மலைப்பாம்பு மற்றும் முதலையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டும் கடுமையாக சண்டையிடுவது வீடியோவில் தெரிகிறது. மலைப்பாம்புக்கென சில பண்புகளும் திறமைகளும் உள்ளன. அதேபோல், முதலைக்கும் சில சிறப்பியல்புகள் உள்ளன. 

முதலை தண்ணீரில் மட்டுமல்லாமல், தரையிலும் தன் இரையை கொல்லும் திறன் பெற்றது. மலைப்பாம்போ மிகப்பெரியது. தன் பலத்தால், மிக எளிதாக, மனிதனையும் விலங்குகளையும் முழுவதுமாக விழுங்கும் திறன் கொண்டது. 

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள் 

இந்த இரண்டு ஆபத்தான உயிரினங்களும் நேருக்கு நேர் வந்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பார்த்தாலே பயங்கரமாக உள்ளது. இந்த வீடியோவும் நம்மை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. 

சண்டையிட்ட சாத்தான்கள் 

காட்டு விலங்குகளின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ஆற்றங்கரையில் மலைப்பாம்பு ஒன்றும் ஒரு முதலையும் நேருக்கு நேர் வருவதைக் காண முடிகின்றது. முதலையை பார்த்த உடனேயே மலைப்பாம்பு முதலையை தாக்கியது. முதலையும் தொடர்ந்து மலைப்பாம்பு மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மலைப்பாம்பு முதலையை கவ்விக்கொள்கிறது. இரண்டு நிமிடங்களில் அதை முழுவதுமாக விழுங்கி விடுகிறது. பின், அங்கு எதுவுமே நடக்காதது போல் நடந்துகொள்கிறது. சத்தம் இல்லாமல் பெரிய யுத்தம் நடந்து முடிகிறது. 

மலைப்பாம்பு முதலையை விழுங்கும் வீடியோவை இங்கே பாருங்கள்:

காட்டுக்குள் கைதான களேபரம் 

மலைப்பாம்புக்கும் முதலைக்கும் இடையிலான சண்டையின் இந்த வீடியோ மிகவும் ஆச்சரியமாகவும் அச்சத்தை அதிகரிக்கும் வகையிலும் உள்ளது. இதைப் பார்ப்பவர்களுக்கும் பீதி பற்றிக்கொள்கிறது. இந்த வீடியோ ojatro என்ற என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிடைத்துள்ள வியூஸ்களை பார்த்து இது எவ்வளவு பிரபலம் அடைந்துள்ளது என்பது தெரிகிறது. இந்த வீடியோ இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த டிரெண்ட் இன்னும் தொடர்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | ஆமைகளுக்குள் நடந்த வித்தியாசமான போட்டி! வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News