வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நட்பும் பாசமும் மலர்வது புதிதல்ல. அது பொதுவாக நடக்கும் ஒரு விஷயம்தான். எனினும், காட்டு விலங்குகளுடன் நட்பு பாராட்டுபவர்கள் மிகச்சிலரே. காட்டில் உள்ள பயங்கரமான விலங்குகளில் வலிமைமிக்க சிறுத்தையும் ஒன்றாகும். ஒருவர் சிறுத்தையை நேர் எதிரே சந்திக்க நேரிட்டால், அந்த நபர் தப்பிப்பது மிக கடினம். ஏனெனில், சிறுத்தை மிக வேகமாக ஓடும் விலங்கு. ஆகையால், அதன் முன் போகாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது. ஆனால், அப்படிபட்ட சிறுத்தைக்கும் மற்றொரு பக்கம் உள்ளது என்பதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு வீடியோ எடுத்துக்காட்டியுள்ளது.


இந்த வீடியோவில் ஒரு பெண் சிறுத்தைக்கு முத்தமிடுவதையும் அரவணைப்பதையும் காண முடிகின்றது. இந்த வீடியோ பயனர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் காணப்படும் நம்பமுடியாத மனித-விலங்கு பிணைப்பைப் பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவில், ஒரு பெண் சிறுத்தையை எந்த பயமும் இல்லாமல் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். மேலும் அந்த சிறுத்தையை அன்புடன் அணைத்து பாசத்தை பொழிகிறார். 


சிறுத்தையும் அவருடன் ஆசையாக பழகுவதையும், அவருடன் நிம்மதியாக இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. தன் நாவினால், அந்த பெண்ணின் முகத்தையும் கைகளையும் நக்கி, சிறுத்தை தனது அன்பை வெளிப்படுத்துகிறது. அந்த பெண் மற்றும் சிறுத்தையின் தனித்துவமான பிணைப்பு பயனர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனினும், இது சிலரை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | துரத்திய புலியை விரட்டிய பசு: நம்ப முடியாத வைரல் வீடியோ 


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @african animal என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 100,000 க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இந்த வீடியோவுக்கு 'சீடா லவ்' என கேப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. 


சிறுத்தைக்கு முத்தமிடும் பெண்ணின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். "கடவுளே, அந்த விலங்கு அந்த பெண்ணுக்கு முத்தமிட்டதா? அந்த பெண் ஆபத்தில் இருக்கிறார்" என ஒருவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொருவர், "வீடியோவில் இரண்டு சிறுத்தைகளை காண்கிறேன்" என்று பெண்ணின் தைரியத்தை புகழ்ந்து இருக்கிறார். 


"இவர்கள்தான் உண்மையான நண்பர்கள்" என்று ஒருவர் எழுத, மற்றொரு பயனர், "அன்பிற்கு எந்த தடையும் இருக்க முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணம்" என கூறியுள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: சாலையோர கடையில் பானிபூரியை சுவைக்கும் யானை... நெட்டிசன்களை கவர்ந்த காட்சி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ