கீழே எதுவும் தள்ளிவிட்டுறாத! மான் மீது சவாரி செய்யும் குரங்குக் குட்டி!

மனிதர்கள் குதிரை சவாரி செய்வதைப்போன்று குரங்குக்குட்டி ஒன்று மான் மீது சாவகாசமாக அமர்ந்துகொண்டு சவாரி செய்யும் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2022, 11:40 AM IST
  • மான் மீது சவாரி செய்யும் குரங்கு.
  • மான் மீது படுத்துக்கொண்டு செல்கிறது.
  • இணையத்தில் வீடியோ வைரல்.
கீழே எதுவும் தள்ளிவிட்டுறாத! மான் மீது சவாரி செய்யும் குரங்குக் குட்டி! title=

இணையத்தில் பரவக்கூடிய விலங்குகளின் வீடியோக்கள் நம்மை மகிழ்விக்கும் செயலில் ஒருபோது பின்வாங்கியதே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு விலங்குகள் இணையத்தையும், இணையவாசிகள் இதயங்களையும் ஆக்கிரமித்து இருக்கின்றது.  சில வீடியோக்கள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும் வகையிலும், சில வீடியோக்கள் நம்மை பரிதாபப்பட வைக்கும் வகையிலும், சில வீடியோக்கள் நம் கவனத்தை கவரும் வகையிலும் என நமது பலவித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கிறது.  விலங்குகள் இப்படியெல்லாம் கூட செய்யுமா என நாம் வியக்கும் வகையிலேயே பல அரிய நிகழ்வுகள் நடந்தேறுகிறது, இவற்றை நம்மால் நேரில் கண்டு ரசிப்பது சற்று கடினம் அதனாலேயே இணையம் இதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 

இப்போது இணைய பக்கத்தில் நம்மை ரசிக்கவைக்கும் வகையில் பகிரப்பட்டிருக்கும் ஒரு வீடியோவில், மனிதர்கள் குதிரை சவாரி செய்வதை போன்று குரங்குக்குட்டி ஒன்று மான் மீது ஏறி சொகுசாக அமர்ந்துகொண்டு சவாரி செய்கிறது, இந்த நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தினுள் நடந்தேறியுள்ளது. இதனை அசார் என்பவர் வீடியோ எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.  தன் மீது அமர்ந்திருக்கும் குரங்குக்குட்டியை, மான் எதுவுமே செய்யாமல் அது சாதாரணமாக மேய்ந்துகொண்டு இருக்கின்றது.  

 

இந்த காணொளி பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கிறது, அக்டோபர் 10ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த அழகான வீடியோவுக்கு பல்லாயிரக்கணக்கான  லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News