Viral Video: சாலையோர கடையில் பானிபூரியை சுவைக்கும் யானை... நெட்டிசன்களை கவர்ந்த காட்சி!

வைரல் வீடியோ: சாலையோர விற்பனையாளர் யானைக்கு ஒவ்வொரு பானிபூரியாக எடுத்து, அதில் உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பி யானைக்கு ஊட்டுவதை வீடியோவில் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2022, 02:38 PM IST
  • வட இந்தியாவில் மிகவும் விரும்ப்படும் சிற்றுண்டி பானிபூரி எனலாம்.
  • பானிபூரி விற்பனையாளருக்கு அருகில் யானை ஒட்டி நின்று கொண்டிருக்கிறது.
  • விற்பனையாளர் யானைக்கு ஒவ்வோரு பானிபூரியா ஊட்டுவதை நாம் காணலாம்.
Viral Video: சாலையோர கடையில் பானிபூரியை சுவைக்கும் யானை... நெட்டிசன்களை கவர்ந்த காட்சி! title=

வைரல் வீடியோ: சமூக ஊடகத்தில் தினம் தினம் எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்படும் நிலையில், சில வீடியோக்கள் மட்டுமே  நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அதில் சில  வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சியை கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும் யானைகளின் குறும்பு வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.

வட இந்தியாவில் மிகவும் விரும்ப்படும் சிற்றுண்டி பானிபூரி எனலாம். இப்போது தென்னிந்தியாவிலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இங்கே ஒரு ஒரு யானை பானிபூரியை மிகவும் ரசித்து சாப்பிடுகிறது. அசாமின் தேஜ்பூரில் உள்ள ஒரு சாலையோர கடையில் யானை ஒன்று பானிபூரியை ருசித்து சாப்பிடுவதைக் காணலாம். யானை ஒன்று பானிபூரியை ரசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட யானை! இணையத்தை கலக்கும் வீடியோ!

யானை பானிபூரி உண்ணும் வைரல் வீடியோவை கீழே காணலாம்:

 

 

சிற்றுண்டியைத் தயாரித்து விற்கும் அந்த விற்பனையாளரும் யானைக்கு அதனை ஊட்டி விடுவதில் மகிழ்ச்சி அடைவதையும் காணலாம். அரிய மற்றும் ஆச்சரியமான காட்சியைப் பார்த்து, பலர் வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

பானிபூரி விற்பனையாளருக்கு அருகில் யானை ஒட்டி நின்று கொண்டிருக்கிறது. விற்பனையாளர் யானைக்கு ஒவ்வோரு பானிபூரியா ஊட்டுவதை நாம் காணலாம். யானைக்கு அருகில் காவலர் ஒருவர் நிற்பதைக் காணலாம். இந்த வீடியோ பல சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யானைகள் அஸ்ஸாமில் அதிகமாக காணப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, ஒரு யானை பொம்மை போல ஒரு காரை சுழற்றி வீசும் காட்சி வைரலாக பரவியது. சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் படிக்க |  Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!
 

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News