வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் நடன வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


சமூக வலைத்தளங்களில் பல சவால் வீடியோக்களையும் நாம் காண்கிறோம். நடன சவால்கள் மிகவும் வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் கருதப்படுகின்றன. 


கனடாவில் காலியான தெரு ஒன்றின் நடுவில் ‘சையா தில் மே ஆனா ரே’ என்ற இந்தி பாடலுக்கு ஒரு பெண் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ளது. 


மேலும் படிக்க | ஃபோட்டோ முக்கியம் அண்ணே: மாஸ் காட்டும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ 


சாதாரண டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, அந்தப் பெண் அனாயாசமாக நடனமாடுவது காண்பதற்கு நன்றாக உள்ளது. மிகவும் நம்பிக்கையுடன், கச்சிதமான நடன அசைவுகளுடன் அவர் ஆடும் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. 


கடந்த மாதம் பகிரப்பட்ட இந்த வீடியோ 4000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பல ஊக்கமளிக்கும் கமெண்டுகளையும் குவித்துள்ளது. பதிவின் ஹேஷ்டேக்குகளில் இருந்து, வீடியோ கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள கேப் பிரெட்டன் தீவில் படமாக்கப்பட்டது போல் தெரிகிறது.


இந்த வீடியோ kattan_kaappy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. வீடியோவுக்கு "சயான் தில் மே ஆனா ரே" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அசால்டாக அந்த பெண் நடனமாடுவது காண்பவர்களையும் உற்சாகப்படுத்துகிறது.


அசால்டாக டான்ஸ் ஆடி அதிர வைத்த பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண்ணின் வீடியோவை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறரகள்.  "சூப்பராக ஆடியுள்ளீர்கள்" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்கள். மற்றொருவர் "மிக அருமையான நடனம்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இப்படி பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 


மேலும் படிக்க | உலகத்திலேயே பெரிய பேனா எங்கு உள்ளது தெரியுமா? - வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR