வைரல் வீடியோ: பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. இணைய உலகம் ஆச்சரியங்களை அள்ளி தருவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை
இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் இரண்டு விலங்குகள் பரஸ்பரம் அன்பைப் பொழிவதைக் காணலாம். சில சமயங்களில் பரஸ்பரம் உக்கிரமாக சண்டையிடுவதைக் காணலாம். சில நேரங்களில் வேடிக்கையான விளையாட்டுக்களையும் காணலாம்.
உலகின் பல பகுதிகள் தற்போது கோடை கால வெப்பத்தினால் தவித்து வருகின்றன. மனிதர்களைப் போலவே, விலங்குகளும் வெப்பத்தில் இருந்து விடுபட தன்னால் இயன்ற வகையில் முயற்சி செய்கின்றன. அத்தகைய ஒரு வேடிக்கையா வீடியோவில், நீர்நாய்கள் ஐஸ் கட்டிகளுடன் விளையாடுவதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வரைலாகி வருகிறது.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
மேலும் அவற்றின் கோமாளித்தனங்கள், விளையாட்டுத்தனம் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஐஸ் நிரப்பப்பட்ட தொட்டியில் இரண்டு நீர்நாய்கள் உருளுவதை வீடியோவில் காணாலம், மூன்றாவது நாய் ஐஸ் கட்டிகளுடன் விளையாடுகிறது. மூன்றாவது நீர்நாய் ஐஸ் கட்டிகளை ஒன்றாக சேர்த்து பிடித்து தன் உடம்பின் மேல் உருட்டும் விதம் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோ 94K பார்வைகளையும் 1200 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் குவித்துள்ளது.
நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக்கொண்ட பாலூட்டி விலங்கு. நீர்நாய்கள் பொதுவாக மீன்கள், சிறிய நிலநீர்வாழிகள், பறவைகள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்கள் மெலிந்த நீண்ட உடல்வாகினை கொண்டுள்ளன.
மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR